மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எப்ஸ்டீனை தனியாக சந்தித்ததில்லை என ஹர்தீப் கூறியிருந்தார் அல்லவா? எதிர்க்கட்சிகள் கேள்வி

எப்ஸ்டீனை தனியாக சந்தித்ததில்லை என ஹர்தீப் கூறியிருந்தாரே? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.

எப்ஸ்டீன் - ஹர்தீப் சிங் புரி

எப்ஸ்டீன் - ஹர்தீப் சிங் புரி

Published On :21 அக்டோபர் 2026, 6:18 pm IST

பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனை தனிப்பட்ட முறையில் சந்தித்ததேயில்லை என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியிருந்தாரல்லவா? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன.

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகளின் புதிய பக்கங்களில் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இருக்கும் படங்கள் வெளியான நிலையில் அது குறித்து கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

அமெரிக்காவில் பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் 2019-ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்தார்.

எப்ஸ்டீன் தொடர்பான பல்வேறு ஆவணங்கள், உரையாடிய மின்னஞ்சல்கள், விடியோக்கள், படங்கள், விசாரணை அறிக்கை போன்றவற்றை அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்டு வருகிறது.

எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்ட இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இது நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில, கடந்த பிப்ரவரியில், விளக்கம் கொடுத்த ஹர்தீப் சிங் புரி, சர்வதேச அமைதி தூதுக் குழுவில் தான் இடம்பெற்றிருந்தேன். அக்குழுவுடன் 3 அல்லது 4 முறை எப்ஸ்டீனை சந்தித்துள்ளேன். பொது வாழ்வில், பலதரப்பட்ட மக்களையும் சந்திப்பது என் பணி. அவர்களில் சிலருக்குக் குற்றப் பின்னணியும் இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் சந்தித்ததில்லை” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது வெளியான எப்ஸ்டீன் பக்கங்களில், ஒரு மூடிய அறையில் ஹர்தீப் சிங் புரி மற்றும் எப்ஸ்டீன் இருவரும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசிய புகைப்படங்கள் பல கோணங்களில் வெளியாகியிருக்கிறது.

இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட், சிவ சேனை தலைவர் சஞ்சய் ரௌத் ஆகியோர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் சுப்ரியா, எப்ஸ்டீனைத் தனிப்பட்ட முறையில் ஒருபோதும் சந்தித்ததில்லை என்று அவர் கூறவில்லையா? பிரதமர் மோடி தன்னைச் சுற்றி வைத்திருக்கும் நபர்கள் எந்த மாதிரியானவர்கள்? இதைவிட வேறு ஏதேனும் ஆதாரம் தேவையா? ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் ஒருபோதும் பெண்களுக்கோ, பெண்களுக்கான சமத்துவத்துக்கோ மதிப்பு கொடுப்பதில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன், மிகக் கொடூரமான குற்றங்களைப் புரிந்த அதே அறையில்தான், மத்திய அமைச்சரை தனிப்பட்ட முறையில் சந்தித்திருக்கும் படங்கள் வெளியாகி மிக மோசமான அறுவறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் எப்ஸ்டீன் - ஹர்தீப் பூரி இடையிலான சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பியதோடு, இது குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.