பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எப்ஸ்டீனுடன் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி! புயலைக் கிளப்பும் புதிய படங்கள்!

ஜெஃப்ரி எப்ஸ்டீனை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தனிப்பட்ட முறையில் சந்தித்த புகைப்படங்கள் வெளியானது...

Epstein | Hardeep singh puri

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி - Photo: DOJ

Published On :21 அக்டோபர் 2026, 4:02 pm IST

அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள எப்ஸ்டீன் கோப்புகளின் புதிய பக்கங்களில் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தனியாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

அமெரிக்காவில் பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தண்டனையாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த நிலையில், எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த விடியோக்கள், புகைப்படங்கள், விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று அமெரிக்காவில் கோரிக்கை வலுத்தது.

தொடர் அழுத்தத்தை அடுத்து, ”எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டத்தை” அமெரிக்க நாடாளுமன்றம் கடந்தாண்டு நவம்பரில் நிறைவேற்றி, அமெரிக்க நீதித்துறையால் எப்ஸ்டீன் கோப்புகள் பல்வேறு கட்டங்களாக வெளியிடப்பட்டு வருகின்றன.

எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்பட பல்வேறு நாட்டுத் தலைவர்களுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதேபோல், எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சரும் அப்போதைய வெளியுறவுத் துறை அதிகாரியுமான ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்ட இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

எப்ஸ்டீனை ஹர்தீப் சிங் புரி நேரில் சந்தித்தது, மின்னஞ்சலில் உரையாடியது உள்ளிட்ட தகவல்கள் எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் பதிலளித்த ஹர்தீப் சிங் புரி, “சர்வதேச அமைதிக்கான தூதுக் குழுவில் இடம்பெற்றிருந்தபோது, அக்குழுவுடன் 3 அல்லது 4 முறை எப்ஸ்டீனை சந்தித்தேன். பொது வாழ்வில் இருப்பவர்கள் பலதரப்பட்ட மக்களை சந்திப்பார்கள். அவர்களில் சிலருக்குக் குற்றப் பின்னணியும் இருக்கலாம்” என்று கூறினார்.

புதிய புகைப்படங்கள்

அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள புதிய பக்கங்களில் எப்ஸ்டீனுடன் ஹர்தீப் சிங் புரி தனியாக ஆலோசனை செய்யும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், தூதுக் குழுவுடன் எப்ஸ்டீனை சந்தித்ததாக ஹர்தீப் சிங் புரி கூறினார், ஆனால், இரண்டு புகைப்படங்களிலும் மற்ற உறுப்பினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Story image

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் வெளியிட்ட பதிவில், "எப்ஸ்டீனைத் தனியாகச் சந்தித்ததே இல்லை என்று புரி கூறிய நிலையில், இந்தப் புகைப்படங்களுக்கு என்ன அர்த்தம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், எப்ஸ்டீன் சில பெண்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறையும் ஹர்தீப் சிங் புரியை எப்ஸ்டீன் சந்தித்த அறையும் ஒரே அறைதான் என்றும் இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

Story image

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியுள்ளனர்.

Summary

Union Minister Hardeep Singh Puri with Epstein! New pictures that are causing a storm!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.