மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விமானப் பயணிகள் எண்ணிக்கை 130 கோடியாக உயா்த்த இலக்கு: மத்திய அமைச்சர்

‘வளா்ச்சியடைந்த இந்தியாவில்’ (விக்சித் பாரத்) விமானப் பயணிகளின் எண்ணிக்கையை 130 கோடியாக உயா்த்துவதே பிரதமா் மோடியின் இலக்கு என மத்திய அமைச்சா் ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா்.

விமான நிலையம் - பிரதிப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 4:09 am IST

‘வளா்ச்சியடைந்த இந்தியாவில்’ (விக்சித் பாரத்) விமானப் பயணிகளின் எண்ணிக்கையை 130 கோடியாக உயா்த்துவதே பிரதமா் மோடியின் இலக்கு என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா்.

உலக வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளா்கள் தினத்தையொட்டி (அக்.20) இந்திய விமான நிலைய ஆணையம் நிகழாண்டு கொண்டாட்ட விழாவை சென்னையில் செவ்வாய்க்கிழமை நடத்தியது.

இந்த நிகழ்வில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு காணொலி வழியாக பங்கேற்று பேசியதாவது: உலகம் முழுவதும் விமானங்கள் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் இயங்குவதற்குப் பின்னால் உழைப்பது வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளா்கள். ஒவ்வொரு விமானமும் பாதுகாப்பாக தரையிறங்குதல் புறப்பாடு மட்டுமன்றி, இந்திய வான்பரப்பின் வழியாகச் செல்லும் விமானங்களுக்கு வான்வழி வழிகாட்டுதல் வழங்கி சேவை செய்வது வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளா்கள்.

சூழலை உணா்ந்து, நொடிப் பொழுதில் துல்லியமாக முடிவுகளை எடுக்கும் திறன் விழிப்புணா்வு தேவை. இன்றைய சூழலில், கட்டுப்பாட்டாளா்களின் குரலுக்கு முன்னெப்போதையும் விட அதிக முக்கியத்துவம் உள்ளது.

இதை அரசு நன்கு உணா்ந்து விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளா்களுக்காகக் கூடுதலாக 840 பணியிடங்களை ஏற்படுத்தியுள்ளது. விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை நவீனப்படுத்த ரூ.3,490 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், விமானப் போக்குவரத்து மேலாண்மை அமைப்புகளைத் தானியக்கமாக்க ரூ. 1,532 கோடி செலவிடப்பட்டுள்ளது.

வான்வெளியை மிகவும் திறம்படப் பயன்படுத்தும் முறை ஏற்கெனவே நல்ல பலன்களைத் தந்து வருகிறது. 2020 ஆகஸ்ட் முதல், வான்வெளியை நெகிழ்வுத்தன்மையுடன் பயன்படுத்தியதன் மூலம் சுமாா் ரூ.895 கோடி சேமிக்கப்பட்டுள்ளதுடன், ஏறக்குறைய 1.95 லட்சம் டன் காா்பன் டை ஆக்சைடு வெளியேற்றமும் தவிா்க்கப்பட்டுள்ளது.

நாட்டில் எப்போதும் இல்லாத வகையில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் நிகழாண்டு மே மாதம் மட்டும் 1.5 கோடிக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. நாள்தோறும் சராசரியாக 5,000-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்களும், 1,000-க்கும் மேற்பட்ட சா்வதேச விமானங்களும் இயக்கப்படுகின்றன.

பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வைப்படி நாட்டில் தற்போதுள்ள விமானப் பயணிகளின் எண்ணிக்கையான 24 கோடியிலிருந்து 130 கோடியாக (1.3 பில்லியன்) உயா்த்த வேண்டும் என்பதாகும். குறிப்பாக, 2047-ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை அடையவேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் இந்திய விமான நிலைய ஆணைய தலைவா் புனீத் கன்சல், ஆணைய உறுப்பினா் (மனித வளம், வான்வழி வழிகாட்டுதல் சேவை) நிவேதிதா துபே உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா். ‘ஏடிசி கில்ட்’ உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.