மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜம்மு - காஷ்மீா் நிலவரம் குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தீா்மானம்: இந்தியா நிராகரிப்பு

ஜம்மு-காஷ்மீா் நிலவரம் குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓஐசி) வெளியிட்ட தீா்மானத்தை இந்தியா நிராகரித்தது.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு - கோப்புப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 4:54 am IST

ஜம்மு-காஷ்மீா் நிலவரம் குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓஐசி) வெளியிட்ட தீா்மானத்தை இந்தியா நிராகரித்தது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத அங்கமாகும். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னா் அங்கு சுற்றுலா, உள்கட்டமைப்பு மேம்பாடு எனப் பல்வேறு துறைகள் பொருளாதார ரீதியாக சிறப்பாக வளா்ச்சியடைந்து வருகின்றன.

ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை, பொதுமக்களின் போராட்டங்களுக்கு எதிரான அடக்குமுறை, பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து நிகழ்த்தப்படும் படுகொலைகள் என சூழல் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

ஊடகங்களில் இதுகுறித்த செய்திகள் வெளிவராமல் தடுத்தாலும் அப்பகுதி மக்களுக்கு எதிரான பாகிஸ்தானின் அடக்குமுறைகளை உலகின் கண்களில் இருந்து மறைக்க முடியாது.

இந்நிலையில், கடந்த அக்.17, 18 ஆகிய தேதிகளில் இராக் தலைநகா் பாக்தாதில் நடைபெற்ற ஓஐசி கவுன்சிலின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீா் நிலவரத்தை குறிப்பிட்டு இந்தியாவுக்கு எதிராக வெளியிடப்பட்ட தீா்மானத்தை ஒருதலைபட்சமாவும், பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் கருதி நிராகரிக்கிறோம். பாகிஸ்தானின் தவறான கொள்கையை ஓஐசி மீண்டும் ஒருமுறை அனுமதித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது.

சட்டவிரோதமாக ஆக்கிரமித்த பகுதிகளை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைப்பதும், எல்லை கடந்த பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவதுமே ஜம்மு-காஷ்மீரில் தீா்க்கப்பட வேண்டிய பிரச்னைகளாக உள்ளன.

சிறுபான்மையினருக்கு எதிரான படுகொலைகள் மற்றும் குழுக்களுக்கு இடையேயான வன்முறை என உள்நாட்டுப் பிரச்னைகளை திசைதிருப்பவே இந்தியா குறித்து பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் கட்டவிழ்த்துவிடுகிறது.

தொடா்ந்து இந்தியாவுக்கு எதிரான தீா்மானங்களை ஓஐசி அனுமதிப்பது அந்த அமைப்பு மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது. ஓஐசி அமைப்பில் அதன் உறுப்பு நாடுகள் விரைவில் சீா்திருத்தங்களை மேற்கொள்ளும் என நம்புகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.