மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

திருவனந்தபுரம்: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே கூட்டு ராணுவப் பயிற்சி தொடங்கியது

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி குறித்து...

INDIA-AUSTRALIA JOINT MILITARY EXERCISE ...

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே கூட்டு ராணுவப் பயிற்சி - டிஎன்எஸ்

Published On :19 அக்டோபர் 2026, 10:43 pm IST

திருவனந்தபுரம்: இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி, திருவனந்தபுரத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

ஆஸ்ட்ராஹிந்த்- 5 என்ற பெயரில் இந்திய ராணுவத்துக்கும், ஆஸ்திரேலிய ராணுவத்துக்கும் இடையேயான கூட்டுப் பயிற்சி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள வெளிநாட்டுப் பயிற்சி மையத்தில் திங்கள்கிழமை(அக்.19) தொடங்கியது.

இந்த பயிற்சி, வரும் நவம்பர் 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா இடையே நடைபெறவுள்ள மிகப்பெரிய கூட்டு ராணுவப் பயிற்சியாக இது இருக்கும். இந்தப் பயிற்சியால், இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு, ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறன் மற்றும் பரஸ்பர நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வலுப்படுத்தும்.

இந்தப் பயிற்சியில், இந்திய ராணுவம், ஆஸ்திரேலிய ராணுவம் ஆகியவற்றில் இருந்து தலா சுமார் 120 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் நான்காவது பதிப்பு, 2025 அக்டோபர் 13 முதல் 26 வரை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள இர்வின் படைத்தளத்தில் நடைபெற்றது.

இந்திய ராணுவக் குழுவில் கார்வால் ரைபிள்ஸ் படையினரும், பிற படைப்பிரிவுகள் மற்றும் சேவைகளைச் சேர்ந்த வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். அதே சமயம், ஆஸ்திரேலிய ராணுவ அணியில் 13 பிரிகேடைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தப் பயிற்சியின் போது, இரு படைகளின் வீரர்களும் வான், கடல் சார்ந்த அம்சங்கள் உள்பட, யதார்த்தமான கள செயல்பாட்டுச் சூழல்களில் கூட்டுத் திட்டமிடல், பயிற்சிகள், போர் சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்வார்கள்.

தொழில்முறை அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதோடு, கடலோர மற்றும் தீவுச் சூழல்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள், கண்காணிப்பு மற்றும் உளவு, முக்கிய தளங்களைப் பாதுகாத்தல் மற்றும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண அவசரகால நிகழ்வுகளுக்குப் பதிலளித்தல் ஆகியவற்றில் இந்தப் பயிற்சி கவனம் செலுத்தும். இந்தப் பயிற்சியில் முதல் முறையாக, நியூசிலாந்திலிருந்து ஒரு பார்வையாளர் குழுவும் பங்கேற்கிறது.

The 5th edition of the India-Australia Joint Military Exercise AUSTRAHIND 2026 commenced today at the Foreign Training Node

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.