மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தில்லி மெட்ரோ முடக்கம்! நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் காவல் ஆணையர்!

உச்ச நீதிமன்றத்தில் தில்லி காவல் ஆணையர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது பற்றி...

delhi metro

தில்லி மெட்ரோ - ANI

Published On :15 அக்டோபர் 2026, 2:32 pm IST

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களை மூடியதற்காக தில்லி காவல் ஆணையர் அனுராக் குமார் இன்று நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி சார்பில் அக்டோபர் 10 ஆம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அன்றைய தினம் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களையும் மூட தில்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது.

இதுதொடர்பாக அக். 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மெட்ரோ ரயில் சேவைகள் இடையூறின்றி இயக்கப்பட வேண்டும், இணைய சேவைகள் தடையின்றி செயல்பட வேண்டும், அமைதியாக போராடுபவர்களை தடுக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.

ஆனால், அக். 10 ஆம் தேதி சில மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தில்லி காவல் ஆணையர் அனுராக் குமார் பிரமாணப் பத்திரங்களை இன்று தாக்கல் செய்தார்.

அதில், வேண்டுமென்றோ, திட்டமிட்டோ நீதிமன்ற உத்தரவுகளை மீறவில்லை. நீதிமன்ற உத்தரவை மீறியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். தனக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

மேலும், பிஎன்எஸ் 163 அமலில் இருந்த பகுதிகளில் மட்டுமே, போராட்டக்காரர்கள் அகற்றப்பட்டனர். அவர்கள் தற்காலிக தடுப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு சூடான தரமான உணவுகள் வழங்கப்பட்டன. இரண்டு முதல் ஆறு மணி நேரத்துக்குள் அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Delhi Metro clodsed - Police Commissioner tenders an unconditional apology

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.