மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!

பிரதமர் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் நாட்டை அபகறித்துவிட்டனர் என ராகுல் குற்றம் சாட்டியுள்ளது குறித்து...

 Rahul Gandhi CEC as protest against ECI continues

போராட்டக்களத்தில் ராகுல் காந்தி - ஏஎன்ஐ

Published On :6 அக்டோபர் 2026, 7:09 pm IST

பிரதமர் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் நாட்டை அபகறித்துவிட்டனர் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று (அக். 6) விமர்சித்தார்.

மத்திய பாஜகவை எதிர்க்காவிட்டால், அவர்கள் நாட்டை அழித்துவிடுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு நரேந்திர மோடியும் அமித் ஷாவும் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக ராகுல் விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் நோக்கி, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பதாகைகளுடன் இன்று (அக். 6) பேரணியாகச் சென்றனர்.

தேர்தல் ஆணையம் செல்லும் வழியில் நாடாளுமன்ற சாலையில் நிதி ஆயோக் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதன் மீது ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், அங்கிருந்த அகில இந்திய வானொலி நிலையத்திற்குள் அனுமதியின்றி உள்ளே நுழைந்தனர். காங்கிரஸ் உறுப்பினர்களும் உள்ளே நுழைந்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

அப்போது ராகுல் காந்தி செய்தியாளர்களுடன் பேசியதாவது:

''300 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதனால் நாங்கள் இங்கு வந்து அமர்ந்துள்ளோம். ஞானேஷ் குமாரையும் மற்ற தேர்தல் ஆணையர்களையும் நாங்கள் சந்திக்க வேண்டும். மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள்தான் இங்கு வந்துள்ளோம். நாங்கள் அவர்களுடன் பேச வேண்டும். கோடிக்கணக்கான மக்கள் எங்களுக்காக வாக்களித்துள்ளனர். நாங்கள் சில கேள்விகளை எழுப்ப வேண்டும். ஆனால், அவர்கள் பதில் அளிக்க விரும்பவில்லை.

ஜனநாயகம் முழுமையாக வீழ்த்தப்பட்டுள்ளது. நரேந்திர மோடி, அமித் ஷா, மோகன் பாகவத் மற்றும் ஞானேஷ் குமார் சேர்ந்து வாக்குகாள் மீதான நம்பிக்கையை சீரழித்துவிட்டனர். நாட்டை மோடியும் அமித் ஷாவும் கொள்ளை அடித்துவிட்டதாகவே நாட்டு மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். அரசியலமைப்பை காப்பாற்ற வேண்டும் என நாங்கள் போராடுகிறோம். காவல் துறையிடம் நான் கேட்பது என்னவென்றால், என்னை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என நீங்கள் நினைத்தால், நாட்டின் வேறு எந்தப் பகுதியில் நான் அமர வேண்டும் என்பதைக் கூறுங்கள்.

நாங்கள் அமைதியாகவே பேரணியைத் தொடங்கினோம். ஆனால், பாதுகாப்புப் படை, சிஆர்பிஎஃப், ஆர்.ஏ.எஃப். மற்றும் பல படைகள் இங்கு குவிக்கப்பட்டுள்ளன. எங்களால் முடிந்த அளவு முன்னேறுவதற்காக நாங்கள் முயற்சித்தோம். தடுப்புக் காவல் ஒருபோதும் தீர்வாகாது. பதவி விலகல் மட்டுமே தீர்வு. இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பிஜேடியும் போராட்டத்தில் இணைந்துள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

Summary

PM Modi-Shah hijacked country Rahul Gandhi CEC as protest against ECI continues

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.