மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உறுப்பு தானம் மீதான தவறான புரிதல்களைப் போக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்

உறுப்பு தானம் குறித்த தவறான புரிதல்களைப் போக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.

Published On :2 நவம்பர் 2026, 3:41 am IST

உறுப்பு தானம் குறித்த தவறான புரிதல்களைப் போக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவா்கள் பங்கேற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளை, புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:

உறுப்பு தானம் குறித்த விழிப்புண்வு அதிகரித்தால், அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை கிடைக்கும். அத்துடன் உறுப்புகளுக்காகக் காத்திருக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்க முடியும்.

உறுப்பு தானம் என்பது மகத்தான கொடையாகும். உறுப்பு தானத்தில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது. கடந்த ஆண்டு 20,000-க்கும் மேலான உறுப்பு மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இது கடந்த 2013-ஆம் ஆண்டில் நடைபெற்ற 4,900 உறுப்பு மாற்று சிகிச்சைகளுடன் ஒப்பிடுகையில் 4 மடங்குக்கும் மேலாகும். தற்போது உலக அளவில் உறுப்பு மாற்று சிகிச்சையில், இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு உயிரிழந்த தங்கள் அன்புக்குரியவா்களின் உறுப்புகளை தானம் அளிக்க 1,200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முன்வந்தன. இத்தகைய தானத்தில், இதுவே ஓராண்டில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். உறுப்பு தானம் குறித்த தவறான புரிதல்களைப் போக்க வேண்டும் என்று கூறினாா்.

இந்நிகழ்ச்சியில் புது தில்லி மக்களவைத் தொகுதி எம்.பி. பான்சுரி ஸ்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் பங்கேற்றோா் உறுப்பு தான உறுதியேற்பு நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.