பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உலக சுகாதார நெருக்கடிக்குத் தீர்வு: சி.பி.ராதாகிருஷ்ணன்

உலகளாவிய சுகாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண உதவுமாறும் மருத்துவ மாணவர்களை குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியது குறித்து...

Vice President CP Radhakrishnan

குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 7:20 am IST

மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுவதற்கு இலக்கு நிர்ணயித்து செயல்படுமாறும், உலகளாவிய சுகாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண உதவுமாறும் மருத்துவ மாணவர்களை குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் அமைந்துள்ள என்டிஆர் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 40}ஆவது ஆண்டு நிறுவன தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

நீங்கள் ஆராய்ச்சி மாணவர்களாக மட்டும் உருவெடுக்காமல் விஞ்ஞானியாகவும் உயர வேண்டும். மேலும் உலகளாவிய சுகாதாரப் பிரச்னைகளுக்கு நீங்கள் தீர்வு காணவேண்டும். இந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறும் நாள் வரவேண்டும். அதற்கு இலக்கு நிர்ணயித்து நீங்கள் செயல்பட வேண்டும். அதுவே எனது விருப்பம்.

மாணவர்கள் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். மனிதர்களின் நலவாழ்வுக்கான கருவியாக தொழில்நுட்பம் பயன்பட வேண்டும். எனினும், மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்குமான உறவுக்கு மாற்றாக தொழில்நுட்ப முன்னேற்றம் வரமுடியாது.

இந்தப் பல்கலைக்கழகம் மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராம ராவின் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. அவர் முதல்வராக இருந்தபோது சென்னையின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டார். ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு அவர் குடிநீரை வழங்கினார்.

ஆராய்ச்சி, பல்வேறு பாடத்திட்டங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, புதுமை படைத்தல், பொது சுகாதாரம் ஆகியவற்றுக்கு இந்தப் பல்கலைக்கழகம் பாடுபட வேண்டும். பல்வேறு மருத்துவம் தொடர்பான பாடத் திட்டங்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்ததன் மூலம் சுகாதாரக் கட்டமைப்பை இந்தப் பல்கலைக்கழகம் வலுப்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் சுகாதார அறிவியல் கல்வியின் மேம்பாட்டுக்கு இந்தப் பல்கலைக்கழகம் முக்கியப் பங்கு வகித்துள்ளது.

போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக மருத்துவர்களும் பொதுமக்களும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வரும் 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக உருவெடுப்பது என்ற இந்தியாவின் கனவு நனவாகும் என்று நம்புகிறேன். இது பிரதமர் நரேந்திர மோடியின் மிகப்பெரிய லட்சியக் கண்ணோட்டமாகும். ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு கிராமமும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பெறவேண்டும்.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கடந்த 12 ஆண்டுகளில் மருத்துவக் கல்வி மிகப்பெரிய விரிவாக்கத்தைக் கண்டுள்ளது. கடந்த 2014}ஆம் ஆண்டுக்கு முன்பு நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 846}ஆக உயர்ந்துள்ளது.

12 ஆண்டுகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்கள் 51 ஆயிரத்தில் இருந்து 1.4 லட்சமாக உயர்ந்துள்ளன. இந்தியா தற்போது 2.25 லட்சம் மருத்துவப் பட்டப்படிப்புகள் மற்றும் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான இடங்களை வழங்குகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.