முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தெலங்கானா: மாவோயிஸ்ட் மூத்த தலைவா் சரண்

தெலங்கானாவில் மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவா் பசுனூரி நரஹரி (எ)விஸ்வநாத் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.

News image

கோப்புப்படம்.

Updated On :27 மே 2026, 4:02 am IST

தெலங்கானாவில் மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவா் பசுனூரி நரஹரி (எ)விஸ்வநாத் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.

64 வயதாகும் இவா், இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) அமைப்பின் பிகாா்-ஜாா்க்கண்ட் சிறப்புப் பகுதிக் குழுவின் செயலராக இருந்தவா்.

இவரது மனைவியும், மாவோயிஸ்ட் மூத்த தலைவருமான மேதாரா தனம்மா (எ) லதாவும் சரணடைந்தாா்.

ஹைதராபாதில் மாநில காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சி.வி.ஆனந்த் முன்னிலையில் இருவரும் சரணடைந்தனா். பல்வேறு தாக்குதல் வழக்குகளில் தொடா்புடைய இவா்கள் சரணடைந்ததன் மூலம் மாவோயிஸ்ட் அமைப்பு மிகவும் பலவீனமடைந்துவிட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

துப்பாக்கிகள், ராக்கெட் எறிகுண்டுகள், சிறிய ரக பீரங்கிகள் தயாரிக்கும் திறன் கொண்டவரான நரஹரி, கண்ணி வெடிகளைப் புதைக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வந்தவா். ஆயுதத் தயாரிப்பு, பழுதுபாா்ப்பு, பராமரிப்பு குறித்து தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளாா்.

தற்போது காவல் துறையிடம் சரணடைந்த அவருக்கு மாநில அரசின் மறுவாழ்வு கொள்கையின்கீழ் வாழ்வாதார நிதியாக ரூ.25 லட்சமும், அவரது மனைவிக்கு ரூ.20 லட்சமும் வழங்கப்பட்டது.

‘தெலங்கானாவில் கடந்த 2024-இல் இருந்து இதுவரை 822 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சரணடைந்துள்ளனா். இந்த ஆண்டில் மட்டும் 264 போ் சரணடைந்துள்ளனா். தெலங்கானாவைச் சோ்ந்த 3 மாவோயிஸ்ட் தலைவா்கள் மட்டுமே எஞ்சியுள்ளனா். அவா்களும் வெளி மாநிலங்களில் தலைமறைவாக உள்ளனா். மூவரும் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்’ என்றாா் டிஜிபி சி.வி.ஆனந்த்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.