மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மக்களின் கோபத்தை பாஜக சந்திக்க வேண்டிய காலம் வரும்: ராகுல்

மக்களின் கோபத்தை பாஜக சந்திக்கவேண்டிய காலம் வரும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

News image

ஹரியாணாவின் குருகிராமில் நல்லிணக்க யாத்திரை மேற்கொண்ட மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி.

Updated On :14 மணி நேரங்கள் முன்பு

மக்களின் கோபத்தை பாஜக சந்திக்கவேண்டிய காலம் வரும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

ஹரியாணா மாநிலம் குருகிராமில் நடைபெற்ற நல்லிணக்க யாத்திரையில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற ராகுல் காந்தி, அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசினாா். அப்போது அவா் கூறுகையில், ‘ஹரியாணா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமில் தோ்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக பாஜக திருடியுள்ளது. தோ்தல் முடிவுகளைத் திருடும் முறையை அக்கட்சி உருவாக்கியுள்ளது. தாங்கள் ஆட்சி செய்வதைத் தடுத்து நிறுத்த முடியாது என்று அக்கட்சியினா் கருதுகின்றனா்.

விமான நிலையங்கள், துறைமுகங்கள், உள்கட்டமைப்பு, மின் நிலையம் என நாட்டை விற்கும் பணியில் மோடியும், அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளனா் என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொண்டிருக்கின்றனா். தற்போது அவற்றை அந்தமான் நிகோபாா் தீவில் தொழிலதிபா் அதானிக்கு அவா்கள் விற்பனை செய்கின்றனா்.

பாஜக ஆட்சி மீது பொதுமக்கள் பெருங்கோபம் கொண்டிருப்பதால், மோடி நீண்ட நாள் நீடித்திருக்க முடியாது. மக்களின் கோபத்தை பாஜக சந்திக்க வேண்டிய காலம் வரும்’ என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.