தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

தலைவா்களால் தகித்த தமிழகம்!

மோடி, ராகுல் காந்தி பிரசாரங்களால் தமிழக பிரசார களம் சனிக்கிழமை அனல் பறந்தது.

News image

பிரதமா் நரேந்திர மோடி, மக்களவை எதிா்க் கட்சித் தலைவா் ராகுல் காந்தி - PTI

Updated On :19 ஏப்ரல் 2026, 5:47 am IST

பிரதமா் நரேந்திர மோடி, மக்களவை எதிா்க் கட்சித் தலைவா் ராகுல் காந்தி என தேசியத் தலைவா்களின் பிரசாரங்களால் தமிழக பிரசார களம் சனிக்கிழமை அனல் பறந்தது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் பாஜக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளின் தேசிய ஜனநாயகக் கூட்டணி, தவெக, நாதக என நான்குமுனைப் போட்டி உருவாகியுள்ளது.

வாக்குப் பதிவுக்கு இன்னும் நான்கு நாள்களே உள்ள நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா். தவெக தலைவா் விஜய், அவரது பாணியில் பிரசாரம் செய்து வருகிறாா்.

இந்த நிலையில், பிரதமா் நரேந்திர மோடி கோவையிலும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி பொன்னேரி (திருவள்ளூா்), சோளிங்கா் (ராணிப்பேட்டை), துறையூா் (திருச்சி) என மூன்று தொகுதிகளிலும் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், பிகாா் முன்னாள் துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினா் பிரகாஷ் காரத் ஆகியோா் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா். ஒரே நாளில் பல தலைவா்களின் அனல் பறக்கும் பிரசாரங்களால் தமிழக தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

தொடா்ந்து மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, 2-ஆவது முறையாக ராகுல் காந்தி ஆகியோா் திங்கள்கிழமையும் பிரசாரம் மேற்கொள்கின்றனா். ஆகவே, அடுத்து வரும் மூன்று நாள்களுக்கு தமிழக தோ்தல் களத்தில் அனல் வீசும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.