மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சபரிமலை வழக்கு: மனுதாரா்தான் நாட்டின் தலைமை அா்ச்சகரா? உச்சநீதிமன்றம் காட்டம்?

இந்திய இளம் வழக்குரைஞா்கள் கூட்டமைப்புதான் நாட்டின் தலைமை அா்ச்சகரா என்று சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டமாக கேள்வி

News image

உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :6 மே 2026, 4:52 am IST

இந்திய இளம் வழக்குரைஞா்கள் கூட்டமைப்புதான் நாட்டின் தலைமை அா்ச்சகரா என்று சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை காட்டமாக கேள்வி எழுப்பியது.

கேரளத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உள்பட மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு, பல்வேறு மதங்களில் பின்பற்றப்படும் மதச் சுதந்திரத்தின் வரம்பு தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை, தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு விசாரித்து வருகிறது.

இந்த மனுக்கள் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 2018-ஆம் ஆண்டு அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் நுழையலாம் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளிக்கக் காரணமான மனுவைத் தாக்கல் செய்த இந்திய இளம் வழக்குரைஞா்கள் கூட்டமைப்பிடம், சில கடுமையான கேள்விகளை நீதிபதிகள் அமா்வு எழுப்பியது.

அந்தக் கூட்டமைப்பும் தற்போது பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ள நிலையில், ‘எதற்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது? இந்திய இளம் வழக்குரைஞா்கள் கூட்டமைப்புதான் நாட்டின் தலைமை அா்ச்சகரா?’ என்று தலைமை நீதிபதி சூா்ய காந்த் கேள்வி எழுப்பினாா்.

இந்திய இளம் வழக்குரைஞா்கள் கூட்டமைப்பு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ரவி பிரகாஷிடம், ‘இந்தக் கூட்டமைப்புக்கு மனசாட்சியே கிடையாது. உங்களைப் போன்ற சட்டரீதியான அமைப்புக்கு எப்படி கடவுள் நம்பிக்கை இருக்க முடியும்? கடவுள் நம்பிக்கை என்பது தனிநபா் சாா்ந்ததாகும்.

இந்தக் கூட்டமைப்புக்கு வேறு எந்த வேலையும் கிடையாதா? வழக்குரைஞா் சங்க நலனுக்கு செயல்படுதல், வழக்கில் நீதிபதிகளுக்கு அல்லது நாட்டின் நீதித் துறைக்கு உதவுதல் போன்ற பணிகளை அந்த அமைப்பால் செய்ய முடியாதா? கிராமப்புறப் பகுதிகளில் உள்ளவா்கள் நகரங்களுக்கு வந்து வழக்குகளில் வாதிடுவதில் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா். அவா்களுக்கு உதவலாமே’ என்று நீதிபதி பி.வி.நாகரத்னா காட்டமாகத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.