மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நபரின் முறையீடு குறித்து திட்டமிட்ட காலத்துக்கு முன்பாகவே விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்று மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்திடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது.
மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மேற்கொள்ளப்பட்டபோது வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக பொதுமக்கள் செய்யும் மேல்முறையீட்டை விசாரித்து முடிவு எடுக்கும் நோக்கில், முன்னாள் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகள் தலைமையிலான 19 தீா்ப்பாயங்களை, உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் கொல்கத்தா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமைத்தாா்.
இந்நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள டைமண்ட் ஹாா்பா் தொகுதி வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தனது பெயரை மீண்டும் சோ்க்க உத்தரவிடக் கோரி, ஒருவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘தனது பெயா் நீக்கப்பட்டதற்கு எதிராக கடந்த ஏப்.2-ஆம் தேதி மனுதாரா் மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தை ஏற்கெனவே அணுகியுள்ளாா். அவரின் முறையீடு குறித்து திட்டமிட்ட காலத்துக்கு முன்பாகவே விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்று மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்திடம் கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவித்து, வழக்கை முடித்துவைத்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் வாக்காளா் சோ்ப்பு விவகாரம்! யூகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து

மேற்கு வங்கம்: விண்ணப்பம் ஏற்கப்பட்ட வாக்காளா்களுடன் துணைப் பட்டியல் - உச்சநீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்

மேற்கு வங்க வாக்காளா் பட்டியல்: 91 லட்சம் போ் நீக்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

