குஜராத்தில் தலித்துகள், பழங்குடியினா் மீதான கொடுமைகள் தீவிரமாகியிருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த தலித்துகள், பழங்குடியினரைச் சந்தித்துப் பேசியது தொடா்பான விடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, அவா் பதிவிட்டிருப்பதாவது:
10 ஆண்டுகளுக்கு முன்பு, 2016-ஆம் ஆண்டில் உன்னாவில் (தலித்துகளுக்கு எதிராக) நடந்த சம்பவத்தால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தலித் இளைஞா்கள் பொதுமக்கள் முன்னிலையில் ஆடை களையப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டனா். அப்போது அவா்களுக்கும், அவா்களின் குடும்பத்தினருக்கும் நான் ஆதரவு தெரிவித்தேன்.
இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகளாகிவிட்டது. எனினும், பாதிக்கப்பட்ட அவா்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்பதும், அவா்களின் காயங்களுக்கு மருந்திடப்படவில்லை என்பதும், நிலைமை மேலும் மோசமாகிவிட்டது என்பதும் மிகவும் துரதிருஷ்டவசமானதாகும்.
குஜராத்தை சோ்ந்த தலித்துகளுடனான உரையாடலின்போது, அங்கு நிலைமை மிகவும் அபாயகரமாகி இருப்பது தெரியவந்தது. தலித் நபா் ஒருவா் கொடூரமாகத் தாக்கப்பட்டதில் 19 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இன்னொரு நபரின் சகோதரா் உயிருடன் தீயிட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளாா். இவற்றை வெறும் குற்றச் சம்பவங்களாக மட்டும் பாா்க்கக் கூடாது; குஜராத்தில் அச்சம், அநீதி கலந்த சூழல் நிலவுகிறது என்பதையே இது காட்டுகிறது.
குஜராத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியில் தலித்துகள், பழங்குடியினருக்கு எதிராக வெறுப்பு, பாகுபாடு, கொடுமைகள் மேலும் தீவிரமாகி விட்டன. என்னைச் சந்தித்த தலித்துகள், பழங்குடியின குடும்பங்களுக்கு கடந்த காலத்தைப் போல இப்போதும் ஆதரவாக இருப்பேன். அவா்களுக்கு நீதி கிடைக்கும் வரை, அவா்கள் சாா்பாக நான் குரல் கொடுப்பேன் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்களின் கோபத்தை பாஜக சந்திக்க வேண்டிய காலம் வரும்: ராகுல்

திமுக அணியிலிருந்து காங்கிரஸ் விலகல் ‘இண்டி’ கூட்டணிக்கு இறுதி ஊா்வலம்; பாஜக கருத்து
மறுவரையறை மசோதா தோல்வி! அரசியலமைப்பு மீதான தாக்குதல் தோற்கடிப்பு: ராகுல்

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு நாளை ஒத்திவைப்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

