நாடு முழுவதுமுள்ள நயாரா நிறுவன பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்காசியாவில் ஈரான் - இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப் படைகள் இடையே நடைபெறும் போரால் கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் தட்டுப்பாடும் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. முன்பைவிட பெட்ரோல், டீசல் வரத்து குறைவாக இருப்பதாகவே கூறப்படுகிறது.
எனினும் நாட்டில் போதிய பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு இருப்பு உள்ளது என்று மத்திய அரசு கூறி வருகிறது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை மற்றும் விலை ஏற்றம் காரணமாக இந்தியாவில் முன்னணி எரிவாயு நிறுவனங்களில் ஒன்றான நயாரா நிறுவனம், பெட்ரோல், டீசல் விலையைஉயர்த்தியுள்ளது .
அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5.30 உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் ரூ. 107.93 -க்கும் விற்பனையாகிறது.
அதேபோல டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் ரூ. 97.22 -க்கு விற்பனையாகிறது.
இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் இதுவரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை. எனினும் நயாராவைத் தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
கடந்த மார்ச் 20 ஆம் தேதி ப்ரீமியம் பெட்ரோல் விலை மட்டும் ரூ.2 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Nayara Energy hikes petrol, diesel prices across India amid West Asia tensions
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை உயருமா? மத்திய அரசு விளக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வா? அமைச்சகம் விளக்கம்!
வழக்கமான பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை: மத்திய அரசு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


