தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்டோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்பதவியேற்பு விழாவில் விஜய் - ராகுல் காந்தி ஒரே மேடையில்...
/

எரிவாயு தட்டுப்பாடு! நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்!

எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம் நடத்தியது பற்றி...

News image

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் - PTI

Updated On :11 மார்ச் 2026, 12:09 pm IST

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய கிழக்கு போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து எரிவாயு ஏற்றுமதி முடங்கியுள்ளதால், நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வீட்டு உபயோகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை தவிர்க்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விநியோகத்தை எரிவாயு நிறுவனங்கள் நிறுத்திவைத்துள்ளன.

இதனால், 5 நட்சத்திர விடுதிகள் முதல் சாலையோர டீக்கடை, தட்டுக்கடை வரை படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. நகரங்களில் உணவகங்களை நம்பி தங்கியிருக்கும் தனியர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், எரிவாயு தட்டுப்பாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் வயநாடு எம்பியுமான பிரியங்கா காந்தியும் கலந்துகொண்டார்.

எரிவாயு தட்டுப்பாடு குறித்து செய்தியாளர்களுடன் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், ”வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்களை வழங்க வேண்டாம் என்று ஏஜென்சிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன. நிலைமை நாளுக்குநாள் மோசமாகி வருகின்றன. நாட்டு மக்களிடம் மத்திய அரசு பொய் சொல்கிறது” என்றார்.

Summary

Gas shortage! Opposition MPs protest in Parliament!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.