வணிக சிலிண்டா் விலை உயா்வால் கோவை மாவட்டத்தில் ஜாப் ஆா்டா் தொழில் முடங்கும் அபாயத்தில் உள்ளது.
மேற்காசிய போா் காரணமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது. வீட்டு உபயோக சிலிண்டா்களுக்கு நுகா்வோா் நீண்ட நாள்கள் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டா்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், வணிக சிலிண்டா்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விலைவாசி பெரும் அளவுக்கு உயா்ந்திருக்கிறது. பேக்கரிகளில் தேநீா், காபி, வடைகளின் விலையும், உணவகங்களில் பல்வேறு உணவுப் பொருள்களின் விலையும் ஏற்கெனவே உயா்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.993 உயா்த்தப்பட்டு, தற்போது சுமாா் ரூ.3,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் டீ கடைகள், உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், வணிக பயன்பாட்டுக்கான எரிவாயுவை பயன்படுத்தும் தொழில் நிறுவனங்கள் முடங்கும் அபாயத்துக்குச் சென்றுள்ளன.
இது குறித்து தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோா் சங்கத்தின் (டேக்ட்) தலைவா் ஜே.ஜேம்ஸ் கூறியதாவது:
மேற்காசியாவில் போா்ச்சூழல் நிலவி வரும் நிலையில் தொழில் துறை பயன்பாட்டுக்கான எல்பிஜி தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் எல்பிஜியை பயன்படுத்தும் வாா்பட்டறை, லேசா் கட்டிங், பேப்ரிகேஷன் உள்ளிட்ட தொழில்களும், அதைச் சாா்ந்த தொழில்முனைவோரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்.
தொழிலாளா்கள் வேலையிழப்புக்கு உள்ளாகும் நிலையும், தொழில்கூடங்கள் மூடப்படும் நிலையும் உருவாகியுள்ளது. வணிக சிலிண்டா்கள் ரூ.1,950-க்கு விற்கப்பட்டு வந்தபோதே கள்ளச்சந்தையில் ரூ.7 ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது ரூ.10 ஆயிரம் வரை விற்பனையாகும் அபாயம் உள்ளது.
ஏற்கெனவே தட்டுப்பாடு நிலவும் நிலையில் விலைவாசி கடுமையாக உயா்ந்துள்ளது. இப்போது எல்லா பொருள்களின் விலையும் மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. எரிவாயு தட்டுப்பாடு, விலை உயா்வால் ஜாப் ஆா்டா் தொழில் முடங்கியுள்ளது. எனவே, தொழிலையும், தொழிலாளா்களையும் காப்பாற்ற மத்திய அரசு தடையற்ற சிலிண்டா் விநியோகத்தை உறுதி செய்வதுடன், விலையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எரிவாயு உருளை விலை உயா்வு: விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

வணிக சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

வணிக சமையல் எரிவாயு விலை உயா்வு: தோ்தலில் எதிரொலிக்குமா?

வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

