மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை ஜந்தர் மந்தரிலிருந்து வெளியேற மாட்டோம் என்று கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே சனிக்கிழமை (ஜூன் 20) பேசியுள்ளார்.
தலைமை நீதிபதி ஒருவரின் விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டிஜிட்டல் கிரியேட்டர் அபிஜீத் தீப்கே என்பவரின் தலைமையில் தொடங்கப்பட்டது கரப்பான்பூச்சி மக்கள் கட்சி. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து போராட்டத்தை அறிவித்தனர்.
அதன்படி, கடந்த ஜூன் 6 ஆம் தேதி தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் அபிஜீத் தீப்கே தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 7,000 பேர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து பெங்களூரு, புணே, லக்னௌ, ஜெய்பூர் போன்ற நகரங்களிலும் போராட்டம் நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் போராட்டக்காரர்கள் கையில் தட்டு, கரண்டி கொண்டு போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் பேசிய அபிஜீத் தீப்கே, “மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை, ஜந்தர் மந்தரை விட்டு வெளியேறப் போவதில்லை. போராட்டத்தை நீட்டிக்க காவல்துறையினரிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று தெரிவித்தார்.
Summary
Abhijit Deepke, leader of the Karappanpoochi Makkal Katchi, stated on Saturday (June 20) that they would not leave Jantar Mantar until Union Education Minister Dharmendra Pradhan resigns.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புணேவில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம்! தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தல்!

கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! - கரப்பான்பூச்சி மக்கள் கட்சி

மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி இளைஞர் காங்கிரஸ் போராட்டம்!

நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!
விடியோக்கள்

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை


