சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! - கரப்பான்பூச்சி மக்கள் கட்சி

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்று கரப்பான்பூச்சி மக்கள் கட்சி தெரிவித்தது பற்றி...

News image

கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும். - படம் - எக்ஸ், ஏஎன்ஐ

Updated On :7 ஜூன் 2026, 1:50 pm IST

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்று கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி ஒருவரின் விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டிஜிட்டல் கிரியேட்டர் அபிஜீத் தீப்கே என்பவரின் தலைமையில் தொடங்கப்பட்டது கரப்பான்பூச்சி மக்கள் கட்சி. அண்மையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து போராட்டத்தை அறிவித்தனர்.

அதன்படி, போராட்டத்தில் பங்கேற்பதற்பதற்காக அமெரிக்காவிலிருந்து நேற்று இந்தியா வந்தடைந்த அபிஜீத் தீப்கே தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் ஆதரவோடு போராட்டம் நடத்தினார். இளைஞர்கள் ஒன்றுகூடி நடத்திய இந்தப் போராட்டம் அரசியல் களத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.

இந்த நிலையில் போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து அபிஜீத் தீப்கே தெரிவித்ததாவது:

ஜந்தர் மந்தரில் 6,000 முதல் 7,000 மக்கள் பங்கேற்ற இந்தப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டம் நாடு தழுவிய அளவில் நடைபெறும். தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம். இதற்கான திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம் என்று தெரிவித்தார்அபிஜீத் தீப்கே.

மேலும், அபிஜீத் தீப்கே இல்லத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Abhijit Dipke, leader of the 'Cockroach Janata Party', stated on Sunday that the protest would continue until Union Education Minister Dharmendra Pradhan resigns.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.