சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் நாள்தோறும் இந்து பக்திப் பாடல்களைப் பாட மாநில பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பள்ளிகளுக்கான புதிய கல்வியாண்டு ஜூன் 16 ஆம் தேதி தொடங்கியது. இதனிடையே, மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் நாள்தோறும் தீப மந்திரம், சரஸ்வதி வந்தனம், குரு மந்திரம், காயத்ரி மந்திரம் உள்ளிட்டவையும் பாடப்பட வேண்டும் என மாநிலத்தின் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, பள்ளிகளில் காலையில் வகுப்புகள் தொடங்கப்படுவதற்கு முன்பாக வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் தேசிய கீதம், தேசிய பாடலுடன் தீப மந்திரம், சரஸ்வதி வந்தனம், குரு மந்திரத்தையும் பாட வேண்டும்.
தொடர்ந்து, மதிய உணவு இடைவேளையின்போது, மாணவர்கள் அனைவரும் இணைந்து உணவுக்கான பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி, பள்ளிநேரம் முடிந்து புறப்படுவதற்கு முன்பாக, சத்தீஸ்கர் மாநிலப் பாடல், காயத்ரி மந்திரம், சாந்தி மந்திரத்தையும் பாட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மாநில அரசின் இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் இந்து பக்திப் பாடல்களையும் பிரார்த்தனைகளையும் கட்டாயப்படுத்துவது, ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்திட்டம் எனக் கூறி காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து வருகிறது.
அரசின் உத்தரவால் மதச்சார்பின்மைக் கொள்கை மீறப்படுவதாகவும், அது திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும், ஒரு மதத்தின் அடிப்படையில் அனைவரின் மீதும் எந்த உத்தரவும் திணிக்கப்படக்கூடாது என்று காங்கிரஸ் கூறியது.
Summary
Hindu prayers made mandatory in Chhattisgarh’s State schools
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அரசுப் பள்ளிகளில் சம்ஸ்கிருதம், ஹிந்தி கட்டாயம் என்பதை மாற்ற வேண்டும்: விஐடி வேந்தா் விசுவநாதன்

5,000 அரசுப் பள்ளிகளில் ஏஐ, கோடிங், ரோபாட்டிக்ஸ் கற்பிக்கப்படும்: அமைச்சா் ராஜ்மோகன் தகவல்

சத்தீஸ்கர்: வெப்ப அலைக்கு 200 வௌவால்கள் பலி!

சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


