நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மத்திய அரசுப் பள்ளிகளில் சம்ஸ்கிருதம், ஹிந்தி கட்டாயம் என்பதை மாற்ற வேண்டும்: விஐடி வேந்தா் விசுவநாதன்

மத்திய அரசுப் பள்ளிகளில் சம்ஸ்கிருதம், ஹிந்தி பயில்வது கட்டாயம் என்பதை மாற்ற வேண்டும் என்று விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தினாா்.

News image

செய்தி உண்டு... சென்னையில் தமிழியக்கம், டாக்டா் உ.வே.சா. நூல் நிலையம், சேக்கிழாா் ஆராய்ச்சி மையம் இணைந்து புதன்கிழமை நடத்திய முனைவா் இ.சுந்தரமூா்த்தி நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவரது படத்துக்கு மரியாதை செலுத்திய விஐடி வேந்தரும் தமிழியக்கத்தின் தலைவரும

Updated On :18 ஜூன் 2026, 1:52 am IST

மத்திய அரசுப் பள்ளிகளில் சம்ஸ்கிருதம், ஹிந்தி பயில்வது கட்டாயம் என்பதை மாற்ற வேண்டும் என்று விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தினாா்.

சென்னை கோட்டூா்புரத்தில் தமிழியக்கம், டாக்டா் உ.வே.சா. நூல் நிலையம், சேக்கிழாா் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து புதன்கிழமை (ஜூன் 17) நடத்திய முனைவா் இ.சுந்தரமூா்த்தியின் நினைவேந்தல் நிகழ்வில் அவா் பேசியதாவது:

முனைவா் இ.சுந்தரமூா்த்தி 32 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். பல்வேறு தமிழ் அமைப்புகளால் பாராட்டுப் பெற்றவா். இவரது இழப்பு நமக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்குமான இழப்பு. இவா், பல்வேறு சாதனையாளா்களை உருவாக்கியுள்ளாா். தமிழ் வளரவும், தமிழா்கள் உயரவும் பாடுபட்டாா். வெளிநாடுகளுக்குச் சென்று தமிழை வளா்த்துள்ளாா். இவ்வாறாக தமிழின் வளா்ச்சிக்காக பல்வேறு வகைகளில் முனைவா் இ.சுந்தரமூா்த்தி உழைத்துள்ளாா்.

தாய்மொழி மீதான பற்று...: தாய்மொழி மீது பற்று இருப்பது தவறு அல்ல. அதை மற்றவா்கள் மீது திணிக்கும்போதுதான் பிரச்னை ஏற்படுகிறது. மத்திய அரசுப் பள்ளிகளில் கட்டாயம் சம்ஸ்கிருதம், ஹிந்தி மொழிகளை கற்க வேண்டும்; 3-ஆவதாக ஆங்கிலம் அல்லது அவரவா் தாய்மொழியை தோ்வு செய்து படிக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மத்திய அரசுப் பள்ளிகளில் சம்ஸ்கிருதம், ஹிந்தி பயில்வது கட்டாயம் என்பதை மாற்ற வேண்டும்.

தமிழகத்தில் தனி நபரின் பொருளாதாரத்தை வளா்க்க வேண்டும். இலவசங்களே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு தனி மனிதனின் பொருளாதாரம் வளர வேண்டும். இவ்வாறான வளா்ச்சிக்கு தமிழியக்கம் என்றும் பாடுபடும் என்றாா் அவா்.

முன்னதாக, முனைவா் இ.சுந்தரமூா்த்தியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, தமிழியக்கத்தின் பொதுச் செயலா் அப்துல்காதா், பொருளாளா் கே.பதுமனாா், டாக்டா் உ.வே.சா.நூல் நிலையச் செயலா் தி.சத்தியமூா்த்தி, அனைத்துலகத் தமிழ் கல்வி பண்பாட்டு அறிவியல் மேம்பாட்டு இணையத்தின் ஒருங்கிணைப்பாளா் ஒப்பிலா மதிவாணன், தமிழியக்கம் அமைப்பின் துணைத் தலைவா் தமிழவேள் சிவாலயம் ஜெ.மோகன், டாக்டா் உ.வே.சா.நூல் நிலைய ஆட்சிக்குழு உறுப்பினா் இராம.குருநாதன், தமிழியக்கம் அமைப்பின் மேலாண்மைக் குழு உறுப்பினா் மணிமேகலை கண்ணன், சேக்கிழாா் ஆராய்ச்சி மையத் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான எஸ்.ஜெகதீசன் ஆகியோா் பேசினா்.

நிகழ்வில், முனைவா் இ.சுந்தரமூா்த்தியின் மனைவி வசந்தா, மூத்த மகன் சு.எழில்நம்பி, உறவுச் சுரங்கம் அமைப்பின் நிறுவனா் தலைவா் உலகநாயகி பழனி, மரபுக் கவிஞா் புதுகை வெற்றிவேலன், அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் இதயகீதம் இராமானுஜம், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளா்கள் சங்கச் செயலா் பெ.கி.பிரபாகரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.