பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு

சத்தீஸ்கரில் நடைப்பயிற்சியின்போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

மொபைல் - கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 2:41 pm IST

சத்தீஸ்கரில் நடைப்பயிற்சியின்போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் மூத்த பாஜக எம்.எல்.ஏ தரம்லால் கௌசிக் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்திருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரது செல்போனை பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை பாஜக எம்.எல்.ஏ கௌசிக் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் விசாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், குற்றவாளிகளை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மூன்று நாள் மாநிலப் பயணத்தின் போதே இந்தச் சம்பவம் நடந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ், இது மாநிலத்தின் நல்லாட்சி என்று சொல்லப்படுவதன் முகத்தில் விழுந்த அறை என்று விமர்சித்துள்ளது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும், பஸ்தாரில் நடக்கும் மத்திய மண்டலக் குழு கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்காகவும் மத்திய உள்துறை அமித் ஷா மூன்று நாள் பயணமாக சத்தீஸ்கர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Unidentified motorcycle-borne men allegedly snatched the mobile phone of senior BJP MLA Dharamlal Kaushik during his morning walk here on Monday, triggering a political row over law and order.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.