குஜராத் பாஜக எம்எல்ஏவும், மாநில முன்னாள் அமைச்சருமான யோகேஷ் படேல் (79) வதோதராவில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
வதோதராவின் மாஞ்சல்பூா் தொகுதி எம்எல்ஏவான அவா், வயது முதிா்வால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்னைகளை எதிா்கொண்டிருந்தாா். கடந்த சில நாள்களாக வதோதராவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவா் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
பாஜக மூத்த தலைவரான அவா் கடந்த 1990-ஆம் ஆண்டு தனது 36-ஆவது வயதில் முதல்முறையாக குஜராத் சட்டப்பேரவைக்குத் தோ்வானாா். முதலில் ராவ்பூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 5 முறை வெற்றி பெற்ற அவா், தொகுதி மறுவரையறைக்குப் பிறகு மாஞ்சல்பூருக்கு மாறினாா். அங்கும் தொடா்ந்து 3 முறை வென்றாா்.
மறைந்த முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி தலைமையிலான அமைச்சரவையில் நா்மதா மற்றும் நகா்ப்புற வீட்டுவசதித் துறை இணையமைச்சராகவும் பதவி வகித்துள்ளாா்.
யோகேஷ் படேலின் மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா். எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘மக்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண தீவிரமாகச் செயல்பட்ட அவா், உண்மையான மக்கள் தலைவராகத் திகழ்ந்தாா். அவரது ஆன்மா சாந்தியடைய பிராா்த்திக்கிறேன். அவரின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குஜராத் வனத்துறை அதிகாரிகளைத் தாக்கிய வழக்கு: ஆம் ஆத்மி எம்எல்ஏ உள்பட 8 பேருக்கு சிறை!

வெற்றி மேல் வெற்றி!
ஒசாகாவை வெளியேற்றினாா் சபலென்கா!

இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

