குஜராத் வனத்துறை அதிகாரிகளைத் தாக்கி, மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற வழக்குத் தொடர்பாக ஆம் ஆத்மி எம்எல்ஏ சைதர் வாசவா உள்பட 8 பேருக்கு அம்மாநில அமர்வு நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
2023-ஆம் ஆண்டு நவம்பரில், அரசு நிலத்தில் சட்டவிரோதமாகப் பயிரிடப்பட்ட பயிர்களை வனத்துறை அதிகாரிகள் அகற்றினர். இதுகுறித்துப் பேச அதிகாரிகளைத் தனது இல்லத்திற்கு அழைத்த எம்எல்ஏ சைதர் வாசவா, வனத்துறை அதிகாரிகளைத் தாக்கி, மிரட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அதற்கடுத்து அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தேடியாபாடா பழங்குடியினர் தனித் தொகுதி சட்டப்பேரவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பழங்குடியினத் தலைவரான வாசவா மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கலவரம், மிரட்டிப் பணம் பறித்தல், அரசு அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்பான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இச்சம்பவம் தொடர்பாக, வாசவா அவரது மனைவி சகுந்தலா வாசவா மற்றும் பிறரைக் கூடுதல் அமர்வு நீதிபதி ஏ.வி. ஹிர்பாரா குற்றவாளிகள் என அறிவித்தார்.
இதையடுத்த, அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், தாக்குதல், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் ஆயுதச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் குஜராத் நீதிமன்றம் சைதர் வாசவா, அவரது மனைவி சகுந்தலா வாசவா உள்பட 8 பேரை குற்றவாளிகளாக அறிவித்து 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்புடைய மேல்முறையீட்டு நடவடிக்கைகள், நீதிமன்றத்தின் அடுத்தகட்ட முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
A sessions court here on Tuesday sentenced Aam Aadmi Party (AAP) MLA Chaitar Vasava and eight others including his wife to seven-year imprisonment in a November 2023 case involving assault of forest officials and extortion.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி
ஜாா்க்கண்ட்: மின்னல் தாக்கி பெண்கள், சிறாா் உள்பட 8 போ் உயிரிழப்பு
இளைஞரைத் தாக்கி பணம் பறித்த சகோதரா்கள் கைது

மோசடி குற்றச்சாட்டு: கொல்கத்தா காவல் துறை துணை ஆணையா் கைது
விடியோக்கள்

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை


