ராகு - கேது தோஷத்தால் அவதிப்படுபவர்கள் செல்லவேண்டிய பரிகாரத்தலம் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பின்புறம், ஜவஹர்லால் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ மாகாளீஸ்வரர் கோயில். பொதுவாகச் சிவாலயங்களில் ராகுவும் - கேதுவும் நவக்கிரக சன்னதியில் ஒரு பீடத்தின் மேல் எழுந்தருளி இருப்பார்கள். அதில் ராகு மனித முகத்துடனும், பாம்பு உடலுடனும், கேது பாம்பு முகத்துடனும் மனித உடலுடனும் காட்சியளிப்பார்கள். ஆனால், ராகு - கேதுவை வித்தியாசமான நிலையிலும் அபூர்வமான தோற்றத்திலும் நாம் இக்கோயிலில் தரிசிக்கலாம்.
இக்கோயிலில் சிவபெருமான் அமர்ந்த கோலத்தில் பார்வதி தேவியுடன் காட்சியளிக்கிறார். இதில் சிறப்பு என்னவென்றால் அவர் ராகு, கேதுவை தன் கைகளில் ஏந்தி இருக்கிறார். மற்றுமொரு சிறப்பு, ராகுவும் கேதுவும் மனித முகத்துடன் காட்சி அளிக்கிறார்கள். இதுபோன்று காட்சியளிக்கும் ராகு, கேதுவை நாம் வேறு எந்த கோயிலிலும் பார்க்க முடியாது.
இக்கோயிலின் கர்ப்பகிரகத்தில் தனிச்சிறப்பாக ராகு-கேது சிவபெருமானுடன் உள்ள திருக்கோலக் காட்சி அமைந்துள்ளது. இத்தலத்தில் பக்தர்களின் குறை நிவர்த்திக்காக ஒன்பது கிரகங்கள் நவக்கிரகம் தனித்தனி சன்னதியில் அவரவர் தம்பதி சமேதராய் மிகச் சிறப்பாக அமைந்து அருள்பாலிக்கின்றனர். இந்தக் கோயிலில் நவக்கிரகங்கள் தனித்தனி சன்னதிகளில் மூலவர் ஸ்ரீ மாகாளீஸ்வரரைச் சுற்றி அமைந்துள்ளனர்.
ராகுவும் - கேதுவும் தங்களின் பாவ விமோசனத்துக்காக, இங்கு ஸ்ரீ மாகாளீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகத் தல புராணம் சொல்கிறது. அதனால், இக்கோயில், ராகு-கேது பரிகார தலமாகத் திகழ்கிறது.
இங்கு வழிபட்டால், திருமணத் தடை நீங்குவதோடு, கால சர்ப்ப தோஷம், புத்ர தோஷம், பித்ரு சாப தோஷம் ஆகிய அனைத்தும் நீங்கும். ராகு - கேது பெயர்ச்சியின்போது இங்குப் பரிகார ஹோமங்களும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாள்களில், ராகு காலத்தில் தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்யப்படுகின்றன.
ராகு - கேது தோஷத்தின் பொதுவான பாதிப்புகள்
மன அழுத்தம் மற்றும் தடைகள் - எந்தவொரு காரியமும் எளிதில் முடிவடையாமல் தொடர்ச்சியான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும்.
திருமணத்தடை - திருமணத்தில் காலதாமதம் அல்லது திருமணத்திற்குப் பின் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
புத்திர தோஷம் - குழந்தை பிறப்பதில் தாமதம் அல்லது கருக்கலைப்பு போன்ற சிக்கல்கள் உருவாகலாம்.
பொருளாதார இழப்பு - திடீர் செலவுகள், தொழிலில் கூட்டாளிகளால் ஏமாற்றம் மற்றும் நிலையற்ற வருமானம் இருக்கும்.
மனக்குழப்பம் - எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுக்க முடியாமல் தடுமாறுவது, தேவையற்ற பயம் அல்லது அதீத கோபம்.
ஒருவரின் ஜாதகத்தில் ராகு - கேதுக்கள் அமர்ந்திருக்கும் வீடுகளைப் பொருத்து அவைகளின் வகைகளை அறிந்து அதற்கேற்ப பரிகாரங்களையும் செய்யலாம்.
உஜ்ஜைனிக்கு நிகரான தலம்
வட இந்தியாவில் புகழ்பெற்ற 'உஜ்ஜைனி மாகாளேஸ்வரர்' கோயிலுக்கு நிகராகத் தெற்கே விளங்கும் மகா சர்ப்ப தலம் இதுவேயாகும்.
வழிபாட்டுப் பலன்கள்
ஜாதகத்தில் ராகு-கேதுக்களின் சேர்க்கையால் ஏற்படும் 'கால சர்ப்ப தோஷம்' மற்றும் லக்ன தோஷங்கள் இத்தலத்து ஈசனை வணங்க முற்றிலும் நீங்கும்.
காரிய சித்தி
நீண்ட நாள்களாகத் தடைப்பட்டுக் கொண்டே இருக்கும் சுபகாரியங்கள், சொத்து சம்பந்தமான பிரச்னைகள் மற்றும் வழக்குகளில் சாதகமான தீர்வுகள் உண்டாகும்.
மன அமைதி
தவம் புரிவதற்கும், சித்தர்களின் தத்துவங்களை உணர்வதற்கும் ஏற்ற அமைதியான சூழல் இக்கோயிலில் உள்ளதால், தேவையற்ற மன உளைச்சல்கள் நீங்கி ஆழ்ந்த நிம்மதி கிட்டும்.
காஞ்சிபுரம் மாகாளேஸ்வரரைத் தொழுதால் காலத்தின் கோலமும் நமக்குச் சாதகமாய் மாறும்!
ஜோதிடம் ஒரு முன் எச்சரிக்கையே தவிர , முடிவு அல்ல என்பதனை உணரவும்... அதே போல் ஜோதிடர் வழிகாட்டியே தவிர, கடவுள் அல்ல... "பரிகாரம்", என்பது ஜாதகர் மனமாற்றமும், கடவுளிடம் முழு சரணாகதியுமே ஆகும்."
தொடர்புக்கு : WA 98407 17857
In this article, let us learn about the remedial shrine that those suffering from Rahu-Ketu Dosha should visit.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளம்: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்

காஞ்சிபுரத்தில் 181 நபா்களுக்கு ரூ.1.86 கோடி கடன் வழங்க பரிந்துரை

ஐ.நா.வில் ஜம்மு - காஷ்மீா் விவகாரம்: பாகிஸ்தான், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா கண்டனம்

செவ்வாய் உச்சமானால் எந்த வகையில் பாதிக்கும்? பரிகாரம்!
விடியோக்கள்

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


