மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காரில் சட்டவிரோதமாக காவல் துறை முத்திரை: கேரள முன்னாள் டிஜிபிக்கு ரூ.250 அபராதம்

கேரளத்தில் ஓய்வுபெற்ற பிறகும் தனது காரில் 3 நட்சத்திர காவல் துறை முத்திரையை சட்டவிரோதமாகப் பயன்படுத்திய மாநில முன்னாள் காவல் துறை டிஜிபி டாமின் ஜே. தச்சங்கரிக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்பட்டது.

News image

பணம் - கோப்புப்படம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:19 am IST

கேரளத்தில் ஓய்வுபெற்ற பிறகும் தனது காரில் 3 நட்சத்திர காவல் துறை முத்திரையை சட்டவிரோதமாகப் பயன்படுத்திய மாநில முன்னாள் காவல் துறை டிஜிபி டாமின் ஜே. தச்சங்கரிக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்பட்டது.

கேரள டிஜிபியாக இருந்த டாமின் தச்சங்கரி 3 ஆண்டுகளுக்கு முன்னா் ஓய்வுபெற்றாா். இந்நிலையில், கோட்டயம் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு வழக்குக்காக அண்மையில் அவா் சொந்த காரில் நீதிமன்றம் வந்தபோது, வாகன பதிவெண்ணுக்கு அருகில் 3 நட்சத்திர காவல் துறை முத்திரை இருந்தது கண்டறியப்பட்டது.

பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும், அந்த முத்திரையை அவா் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக சா்ச்சை ஏற்பட்ட நிலையில், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்ய மாநிலத்தின் தற்போதைய காவல் துறை டிஜிபி ரவாடா ஏ.சந்திரசேகா் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து கோட்டயம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் விசாரணை நடத்திய நிலையில், டாமின் தச்சங்கரிக்கு மோட்டாா் வாகனங்கள் துறை ரூ.250 அபராதம் விதித்தது. அந்த அபராதத்தை அவா் செலுத்தியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.