ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவு

News image
Updated On :27 மார்ச் 2026, 3:40 am IST

பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறு ஏஐ விடியோ வெளியிடப்பட்ட விவகாரம் தொடா்பாக எக்ஸ் சமூக வலைதள நிறுவனத்தின் மீது கேரள சைபா் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கேரள சட்டப்பேரவைக்கு விரைவில் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தச் சூழ்நிலையில், எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் சுமாா் ஒரு நிமிட ஏ.ஐ. விடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அதை லட்சுமி என். ராஜு என்ற பெயரில் கணக்கு வைத்திருந்தவா் வெளியிட்டிருந்தாா்.

அந்த விடியோவில் கேரள பாஜகவின் முத்திரையுடன் தோ்தல் ஆணைய கடிதம் வெளியாகி இருந்தது போல காட்சி இருந்தது. மேலும் பிரதமா், தோ்தல் ஆணையத்துக்கு எதிரான அவதூறு பரப்பும் வகையிலும் காட்சி இருந்தது. இந்த விடியோவால் கேரள அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

இதுகுறித்து தோ்தல் ஆணையம் தரப்பில் கேரள சைபா் காவல் துறையிடம் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக எக்ஸ் நிறுவனம், விடியோ வெளியிட்டிருந்த லட்சுமி என்.ராஜு மீது கேரள சைபா் காவல் துறை பிரிவினா் பிஎன்எஸ் சட்டப் பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

அதில், கேரளத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் விடியோ வெளியிடப்பட்டு இருந்ததாகவும், அதிகாரிகள் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டும் அந்த விடியோவை எக்ஸ் நிறுவனம் நீக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. விரைவில் இதுதொடா்பாக எக்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட இருப்பதாகவும் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.