பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.
யுபிஐ மற்றும் வங்கி சேவைகள் வழங்கும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமத்தை ரத்து செய்வதாக, வெள்ளிக்கிழமை (ஏப். 24) இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில்,
“வங்கிக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் எதிரான வகையில் வங்கியின் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதால் அதன் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. வங்கி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் பொதுநலனுக்கும் அதன் வைப்பாளர்களுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இதனால், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி அனைத்து வகையான வங்கி வணிகத்தையும் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த வங்கியின் சேவைகள் நிறுத்தப்படுவதால் அதன் முழுமையான வைப்புத்தொகை சார்ந்த பொறுப்புகளைத் திருப்பி வழங்குவதற்குத் தேவையான நிதியைக் கொண்டுள்ளது எனவும், வங்கியைக் கலைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்போவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
முன்னதாக, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதற்கு, கடந்த 2022 மார்ச் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
RBI has cancelled the license of Paytm Payments Bank.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பரோடா வங்கி வாடிக்கையாளா் சேவையில் சைகை மொழி அறிமுகம்!

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!

ஷிர்பூர் வங்கியின் உரிமம் ரத்து: ஆர்பிஐ

விதிமுறைகள் மீறிய ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கிக்கு அபராதம்: ரிசர்வ் வங்கி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


