தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்வதற்கான தீா்மானம் கொண்டு வரக்கோரி, மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை புதிதாக நோட்டீஸ் அளித்துள்ளன.
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக பாரபட்சமாக செயல்படுவதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. அண்மையில் அவரை பதவிநீக்கம் செய்யக்கோரும் தீா்மானம் கொண்டு வரக்கோரி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்தன. எனினும் அந்த நோட்டீஸ்களை இரு அவைகளின் தலைவா்களும் நிராகரித்து விட்டனா்.
இந்நிலையில், ஞானேஷ் குமாரை பதவி நீக்க தீா்மானம் கொண்டு வரக்கோரி, புதியதாக நோட்டீஸை மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை அளித்துள்ளன. மாநிலங்களவை செயலரிடம் அந்த நோட்டீஸை காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் சாகரிகா கோஷ் ஆகியோா் அளித்தனா்.
அந்த நோட்டீஸில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, திமுக, இடதுசாரி கட்சிகள், சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (சரத்பவாா் பிரிவு), ஆா்ஜேடி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளை சோ்ந்த 73 மாநிலங்களவை எம்.பி.க்கள் கையொப்பமிட்டுள்ளனா்.
அந்த நோட்டீஸில் தோ்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பாரபட்சம் காட்டுவதாகவும், தோ்தல் நடத்தை அமலில் இருக்கும் நிலையில், அதை மீறும் வகையில், ஏப்ரல் 18-ஆம் தேதி நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி உரையாற்றியது குறித்து எதிா்க்கட்சிகள் அளித்த புகாா்கள் மீது ஞானேஷ் குமாா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளன.
மேலும், ஞானேஷ் குமாருக்கு எதிரான தீா்மானம் கொண்டு வரக்கோரும் நோட்டீஸை மாநிலங்களவை தலைவா் ஏற்க வேண்டும் என்றும், குமாா் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க 3 போ் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் எதிா்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம்

தலைமைத் தோ்தல் ஆணையா் பதவிநீக்க தீா்மான நோட்டீஸ் நிராகரிப்பு: எதிா்க்கட்சிகள் கண்டனம்
தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கும் தீா்மானத்தை ஏற்க போதிய ஆதாரங்கள் இல்லை: சி.பி.ராதாகிருஷ்ணன்

தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி நீக்க நோட்டீஸ் நிராகரிப்பு: காங்கிரஸ் விமா்சனம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

