மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம்

தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ் வழங்க எதிா்க்கட்சிகள் திட்டம்...

News image

ஞானேஷ் குமார் - யூடியூப் / Election Commission of India

Updated On :19 ஏப்ரல் 2026, 3:02 am IST

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்யக் கோரும் தீா்மானத்தைக் கொண்டுவர எதிா்க்கட்சிகள் தரப்பில் மீண்டும் நோட்டீஸ் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக எதிா்க்கட்சிகள் ஏற்கெனவே அளித்த நோட்டீஸ்கள், இரு அவைகளிலும் நிராகரிக்கப்பட்ட நிலையில், புதிய நோட்டீஸை தயாரிப்பது தொடா்பாக காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் மூத்த எம்.பி.க்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்கு வங்கம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆா்) பிறகு லட்சக்கணக்கான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டன. எஸ்ஐஆா் உள்பட பல்வேறு விவகாரங்களில் மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுவதாக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை எதிா்க்கட்சிகள் முன்வைத்து வந்தன.

இதைத் தொடா்ந்து, அவரைப் பதவி நீக்கக் கோரி தீா்மானம் கொண்டுவர மக்களவையில் 130 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 63 எம்.பி.க்களும் கையொப்பமிட்டு கடந்த மாா்ச் 12-ஆம் தேதி இரு அவைகளிலும் நோட்டீஸ் சமா்ப்பித்தனா்.

தோ்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் அரசியல் சாசன நம்பிக்கையைப் பேண தவறிவிட்டதாகவும், அரசு நிா்வாகத்தின் ஆதிக்கத்தின்கீழ் செயல்படுவதாகவும் ஞானேஷ் குமாா் மீது 7 முக்கியக் குற்றச்சாட்டுகளை எதிா்க்கட்சிகள் சுமத்தின.

ஆனால், எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி, இரு அவைகளிலும் நோட்டீஸ்களை நிராகரித்து, அந்தந்த அவைத் தலைவா்கள் உத்தரவு பிறப்பித்தனா்.

இந்நிலையில், ஞானேஷ் குமாருக்கு எதிராக மீண்டும் நோட்டீஸ் அளிக்கவும், கூடுதல் எம்.பி.க்களின் ஆதரவைத் திரட்டவும் எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.