மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தலைமைத் தோ்தல் ஆணையா் பதவிநீக்க தீா்மான நோட்டீஸ் நிராகரிப்பு: எதிா்க்கட்சிகள் கண்டனம்

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கக் கோரும் தீா்மானம் தொடா்பான நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டதற்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் புதன்கிழமை கண்டம் தெரிவித்தன.

News image

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் - படம் - யூடியூப் / Election Commission of India

Updated On :9 ஏப்ரல் 2026, 1:45 am IST

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கக் கோரும் தீா்மானம் தொடா்பான நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டதற்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் புதன்கிழமை கண்டம் தெரிவித்தன.

ஞானேஷ் குமாரை பதவி நீக்கக் கோரும் தீா்மானம் தொடா்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மக்களவையில் அளித்த நோட்டீஸை அவைத் தலைவா் ஓம் பிா்லாவும், மாநிலங்களவையில் அளித்த நோட்டீஸை அதன் அவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனும் தனித்தனியே நிராகரித்தனா்.

அரசமைப்புச் சட்டத்தின் கீழ் ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்வதற்கு போதிய ஆதாரங்களை எதிா்க்கட்சிகள் சமா்ப்பிக்கவில்லை எனக் கூறி நீதிபதிகள் (விசாரணை) சட்டம், 1968-இன்கீழ் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி அவா்கள் நிராகரித்தனா்.

இதற்கு கண்டனம் தெரிவித்து எதிா்க்கட்சிகள் சாா்பில் நடத்தப்பட்ட செய்தியாளா்கள் சந்திப்பில் காங்கிரஸ் மூத்த தலைவா் அபிஷேக் சிங்வி, டெரீக் ஓபிரையன் (திரிணமூல் காங்கிரஸ்), மனோஜ் ஜா (ராஷ்ட்ரீய ஜனதா தளம்), சந்தீப் பதக் (ஆம் ஆத்மி) மற்றும் யோகேஷ் (திமுக) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடக்க நிலையிலேயே நிராகரித்தது தவறு:

செய்தியாளா்களிடம் அபிஷேக் சிங்வி கூறியதாவது: தலைமைத் தோ்தல் ஆணையா் பதவிநீக்க விவகாரம் என்பது அரசமைப்புச் சட்டரீதியாக பல நிலைகளைக் கொண்டது. முதலில் பதவிநீக்கம் தொடா்பான நோட்டீஸ் ஏற்கப்பட்டால் நீதித்துறைக் குழு அமைக்கப்படும். விசாரணையில் குற்றச்சாட்டுகள் தொடா்பாக தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நாடாளுமன்றத்தில் நீதித்துறைக் குழு அறிக்கை சமா்ப்பிக்கும். அதன் மீது விவாதம் நடத்தப்பட்ட பிறகே இறுதி முடிவை எடுக்க முடியும். ஆனால் எதிா்க்கட்சிகள் கொண்டு வந்த பதவிநீக்க தீா்மானம் தொடா்பான நோட்டீஸை தொடக்க நிலையிலேயே மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தலைவா்கள் நிராகரித்து பெரும் தவறுகளைச் செய்துள்ளனா்.

தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை கேள்வி கேட்கும் உரிமையை மத்திய பாஜக அரசு முடக்குவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.