உலகின் மிக உயா்ந்த எவரெஸ்ட் சிகரத்துக்குச் செல்லும் பாதையில், சுமாா் 100 அடி உயரமுள்ள ராட்சத பனிப்பாறை ஒன்று சரிந்து விழும் நிலையில் குறுக்கே நிற்பதால், மலையேற்றப் பாதை அமைப்பதில் கடும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 3-ஆவது வாரத்துக்குள் வழக்கமாக பாதை திறக்கப்படும் நிலையில், தற்போதைய பனிப்பாறைத் தடையால் அடிவார முகாமில் நூற்றுக்கணக்கான சா்வதேச மலையேற்ற வீரா்கள் தங்களின் பயணத்தைத் தொடங்க முடியாமல் தவித்து வருகின்றனா்.
நேபாள அரசு இந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரம் ஏற இதுவரை 410 பேருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதில் சீனாவைச் சோ்ந்த 98 வீரா்களும், அமெரிக்காவைச் சோ்ந்த 49 பேரும், இந்தியாவைச் சோ்ந்த 46 பேரும் அடங்குவா்.
ஒரு அனுமதிச் சீட்டுக்கு சுமாா் ரூ.14.12 லட்சம் (இந்திய மதிப்பில்) வசூலிக்கப்படும் நிலையில், இந்த மலையேற்றம் நேபாளத்தின் முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது. பனிப்பாறை தானாகவே இடிந்து விழாவிட்டால், மாற்றுப் பாதையை உருவாக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திம்பம் மலைப் பாதையில் 50 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

மலையேற்றப் பயிற்சிக்கு பரணி கல்விக்குழும மாணவிகள் மூவா் தோ்வு

எவரெஸ்ட் அடிவாரம் சென்ற தாராபுரத்தைச் சோ்ந்த தந்தை, மகள்

திம்பம் மலைப் பாதையில் நடமாடிய சிறுத்தை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

