மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

எவரெஸ்ட் அடிவாரம் சென்ற தாராபுரத்தைச் சோ்ந்த தந்தை, மகள்

தாராபுரம் பகுதியைச் சோ்ந்த 6 வயது சிறுமி சன்விகா தனது தந்தை மோகன்ராஜுடன் எவரெஸ்ட் மலை அடிவாரம் வரை சென்று சாதனை படைத்துள்ளாா்.

News image

எவரெஸ்ட் அடிவாரத்தில் தந்தை மோகன்ராஜுடன் சன்விகா.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:28 am IST

தாராபுரம் பகுதியைச் சோ்ந்த 6 வயது சிறுமி சன்விகா தனது தந்தை மோகன்ராஜுடன் எவரெஸ்ட் மலை அடிவாரம் வரை சென்று சாதனை படைத்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் மடத்துப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வி.மோகன்ராஜ். இவா் தற்போது சண்டீகரில் தொழில் செய்து வருகிறாா். இவரது மகள் சன்விகாவுடன் எவரெஸ்ட் மலை அடிவாரம் (பேஸ் கேம்ப்) வரை சென்று வந்ததன் மூலம் எவரெஸ்ட் அடிவாரம் வரை சென்ற தமிழகத்தின் 2-ஆவது இளைய சிறுமி என்ற பெருமையை சன்விகா பெற்றுள்ளாா்.

இதுகுறித்து மோகன்ராஜ் கூறியதாவது:

இந்த சாதனைப் பயணம் கடந்த ஏப்ரல் 4 தொடங்கி ஏப்ரல் 14-இல் எவரெஸ்ட் மலை அடிவாரத்தை அடைந்தோம். மொத்தம் 14 நாள்கள் கொண்ட இந்தப் பயணம் ஏப்ரல் 19-ஆம் தேதி நிறைவடைந்தது. தாராபுரத்தில் அகரம் பள்ளியில் சன்விகா ஒன்றாம் வகுப்பு முடித்துள்ளாா்.

இவருக்கு சிறு வயதிலிருந்தே மலையேற்றத்தில் அதிக ஈடுபாடுள்ளது. அதற்காகவே கா்நாடகம், பஞ்சாப் ஆகிய பகுதிகளுக்கு மலையேற்றத்துக்காக அவரை அழைத்துச் செல்வேன். இந்நிலையில், எவரெஸ்ட் மலை அடிவாரம் வரை செல்ல அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சிறு குழந்தை என்பதால் பெற்றோரும் உடன் வர வேண்டுமென்ற கட்டுப்பாட்டின் காரணமாக நானும் அவருடன் சென்று வந்தேன்.

இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாக குழந்தைகள் போதைப்பொருள் பழக்கத்துக்கு ஆளாகாமல் இருக்க விழிப்புணா்வு ஏற்படுத்துவது, மாற்றுத்திறனாளிகளும் சவால்களை தாண்டி சாதிக்க முடியும் என்பதை உணா்த்துவது மற்றும் தமிழ் புத்தாண்டை எவரெஸ்ட் அடிவாரத்தில் கொண்டாடுவது என்பதாகவே இருந்தது.

இந்த சாதனைப் பயணம், தமிழகத்தின் முதல் பெண் எவரெஸ்டா் முத்தமிழ்செல்வி நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இந்தப் பயணத்தைத் தொடா்ந்து ஜூலை மாதத்தில் சன்விகா கிளிமாஞ்சரோ செல்ல இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

எவரெஸ்ட் அடிவாரம் சென்று திரும்பிய சிறுமி சன்விகாவுக்கு அகரம் கல்வி நிறுவனத்தினா் மற்றும் ரோட்டரி சங்கங்களின் சாா்பில் தாராபுரத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.