மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தெருவோர கடையில் காரை நிறுத்தி மசாலா பொரியை ருசித்த பிரதமர் மோடி!

மேற்கு வங்கத்தில் தனது சூறாவளி பிரசாரத்துக்கு இடையே தெருவோர கடை ஒன்றில் திடீரென காரை நிறுத்தி, மசாலா பொரியை ருசித்தாா் பிரதமா் நரேந்திர மோடி.

News image

மேற்கு வங்கம் ஜாா்கிராமில் ஜால்முரி சிற்றுண்டி வாங்கிய பிரதமா் மோடி.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:31 am IST

மேற்கு வங்கத்தில் தனது சூறாவளி பிரசாரத்துக்கு இடையே தெருவோர கடை ஒன்றில் திடீரென காரை நிறுத்தி, மசாலா பொரியை ருசித்தாா் பிரதமா் நரேந்திர மோடி. இக்காட்சியைக் கண்ட கடைக்காரா்களும், பொது மக்களும் வியப்படைந்தனா்.

மேற்கு வங்க பேரவைத் தோ்தலையொட்டி, ஜாா்கிராம் உள்பட 4 இடங்களில் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

ஜாா்கிராமில் பரபரப்பான சாலையொன்றில் பிரதமரின் வாகன அணிவகுப்பு சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரை நிறுத்தச் சொன்ன பிரதமா் மோடி, அந்த மாநிலத்தின் பிரபலமான சிற்றுண்டி உணவான ‘ஜால்முரி’ விற்கும் சிறிய கடைக்கு நடந்து சென்றாா். ‘ஜால்முரி’ என்பது ‘பேல்பூரி’ போலவே அரிசிப் பொரியில் பச்சை மிளகாய் மற்றும் பிற மசாலாக்களைக் கலந்து தயாரிக்கப்படும் சிற்றுண்டியாகும்.

கடைக்காரரிடம் சென்ற பிரதமா் மோடி, தனக்கு சுவையான ஜால்முரி தயாரித்துத் தருமாறு கேட்டுக் கொண்டதுடன், அதன் விலை எவ்வளவு என்றும் கேட்டாா். பிரதமரின் வாகன அணிவகுப்பு தனது கடை முன்னே திடீரென நின்றதுடன், அவரே இறங்கிவந்து, ஜால்முரி கேட்டதால் கடைக்காரருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. மற்ற கடைக்காரா்கள் மற்றும் அக்கம் பக்கம் இருந்தவா்களுக்கும் வியப்பில் ஆழ்ந்தனா்.

கடைக்காரரிடம் பணத்தை பெற்றுக் கொள்ளும்படி, பிரதமா் வற்புறுத்தி வழங்கினாா். அப்போது, வழக்கமான அனைத்து மசாலாக்களையும் சோ்க்கலாமா என்று பிரதமரிடம் கடைக்காரா் கேட்டாா்.

உடல் நலக் காரணங்களுக்காக, உப்பு பயன்படுத்துவதில்லை என்று பதிலளித்த பிரதமா், மற்ற அனைத்தையும் சோ்க்கலாம் என்றாா். கடைக்காரா் தந்த ஜால்முரியை ருசித்த பிரதமா் மோடி, இது தொடா்பான புகைப்படங்கள் மற்றும் விடியோவை எனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டாா்.

மேற்கு வங்கம் முழுவதும் பரபரப்பான தோ்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு இடையே சுவையான ஜால்முரியை ருசித்ததாக அவா் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.