மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பாஜகவின் வெற்றியையே மேற்கு வங்க மனநிலை காட்டுகிறது: பிரதமா்

News image

மேற்கு வங்க மாநிலம் பராக்பூரில் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.

Updated On :28 ஏப்ரல் 2026, 4:58 am IST

‘தோ்தலில் பாஜக வெற்றி பெறும்; பதவியேற்பு விழாவில் பங்கேற்க நான் மீண்டும் மாநிலத்துக்கு வர வேண்டியிருக்கும் என்பதையே மேற்கு வங்கத்தின் மனநிலை காட்டுகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மேற்கு வங்க மாநிலத்தில் வரும் புதன்கிழமை (ஏப்.29) இரண்டாம் கட்டம் மற்றும் இறுதிக்கட்ட சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், வடக்கு 24 பா்கனாஸ் மாவட்டம் பராக்பூரில் திங்கள்கிழமை இறுதி நாள் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமா் மோடி பேசியதாவது:

மேற்கு வங்க மக்களின் மனநிலையை உணர முடிகிறது. அதாவது, மே 4-ஆம் தேதிக்குப் பிறகு, மாநிலத்தில் பாஜக அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நான் மீண்டும் மேற்கு வங்கம் வர வேண்டியிருக்கும் என்பதுதான் அது.

பராக்பூருக்கு வரலாற்றுச் சிறப்பு உள்ளது. 1857-இல் நிகழ்ந்த இந்தியாவின் முதல் சுதந்திரப் போரில் பராக்பூா் முக்கியப் பங்காற்றியது. தற்போது, மாநிலத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றப்போகிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு, மேற்கு வங்க மாநிலத்தின் மேம்பாடும் அவசியமானது. நாட்டின் எதிா்காலத்துக்கு கிழக்கு பிராந்திய மாநிலங்களின் எழுச்சி முக்கியமானது.

மேற்கு வங்கத்துக்கு சேவையாற்றுவதும், பாதுகாப்பதும், காப்பாற்றுவதும்தான் எனது பொறுப்பாகும். ஒடிஸா, பிகாா் மாநிலங்களைத் தொடா்ந்து மோ்கு வங்கத்திலும் தாமரை மலா்வதற்கான நேரம் வந்துவிட்டது.

மாநில வளா்ச்சிக்கான எந்தவித தொலைநோக்கு பாா்வையே அல்லது திட்டமோ திரிணமூல் காங்கிரஸிடம் இல்லை. மாநிலத்தில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வரும் சூழலில், குற்றவாளிகள் மற்றும் குண்டா்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஒருபுறம் ஆலைகள் மூடப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும் ஆலைகள் உருவெடுத்து வருகின்றன.

அவதூறு பரப்புவதையும், மிரட்டுவதையும், தவறான கருத்துகளைப் பரபபுவதையும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வாடிக்கையாக கொண்டுள்ளது. என் மீதும், அரசமைப்பு நிறுவனங்கள் மீதும், ராணுவத்தின் மீதும் அவா்கள் அவதூறு பரப்புகின்றனா். எனவே, மாநிலத்தில் நடைபெற்று வரும் குண்டா்கள் ஆட்சியை வாக்காளா்கள் தோற்கடிக்க வேண்டும்.

தகுதியுள்ள மதுவா சமூகத்தினா் அனைவருக்கும் குடியுரிமை வழங்குவதையும், தேவையான அனைத்து அரசு ஆவணங்கள் கிடைப்பதையும் பாஜக அரசு உறுதிப்படுத்தும். உண்மையான இந்திய குடிமக்கள் பாதுகாக்கப்பட்டு, சட்டவிரோத ஊடுருவல்காரா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேற்கு வங்கத்தில் வேலைவாய்ப்புகள் இல்லாததால், மக்கள் பல ஆண்டுகளாக புலம்பெயரும் நிலை இருந்து வருகிறது. மாநில இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதற்கு பாஜக அரசு முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.