மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் சுவேந்து அதிகாரிக்கும் அவர் தலைமையிலான அமைச்சரவைக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவையில் 207 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான பெரும்பான்மையைப் பெற்றது. இதன் மூலமாக, திரிணமூல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சியை பாஜக முடிவுக்குக் கொண்டுவந்தது.
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் பவானிபூர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்டு சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். மேலும், அவர் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான நந்திகிராமிலும் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (மே 8) நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டு, அவரே முதல்வராகவும் பொறுப்பேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நிகழ்ந்த பதவியேற்பு விழாவில் சுவேந்து அதிகாரி முதல்வராகவும் மற்றும் அவருடைய தலைமையிலான அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி போன்ற முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதனிடையே, பதவியேற்பு விழா முடிந்த பிறகு, அந்த மேடையிலேயே மேற்கு வங்கத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், பாஜக சார்பில் மேற்கு வங்கத்தில் பதவியேற்கும் முதல் முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
Summary
Prime Minister Modi extended his congratulations to West Bengal's new Chief Minister, Suvendu Adhikari, and the cabinet led by him.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மேற்கு வங்கத்தில் தாமரை மலர்ந்தது! தலைவணங்குகிறேன்! பிரதமர் மோடி
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி சாலைவலம்!
அரசியலில் அதிகளவிலான பெண்கள் நுழைய வேண்டும்: பிரதமர் மோடி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


