உடல்நலக் குறைவு காரணமாக ஆந்திர துணை முதல்வரும் ஜன சேனை தலைவருமான பவன் கல்யாணுக்கு சனிக்கிழமை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
இதுகுறித்து ஜன சேனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், பவன் கல்யாண் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். வெள்ளிக்கிழமை நடந்த அதிகாரப்பூர்வ கூட்டத்தின் போது கல்யாணுக்கு உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டது.
பின்னர் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யப்பட்டது.
தொடர்ந்து சனிக்கிழமை மாலை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. பவன் கல்யாணை சுமார் ஒரு வாரம் முதல் 10 நாள்கள் வரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இருப்பினும், முழுமையாகக் குணமடைய அதிக காலம் எடுக்கும் என்றும் அவர்கள் எச்சரித்ததாக அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Andhra Pradesh Deputy Chief Minister Pawan Kalyan underwent a surgical procedure on Saturday following a health complication.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு

மறுவரையறை மசோதா! விவாதம் செய்யத் தயாரா? - ஆந்திர துணை முதல்வருக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் சவால்!
பவன் கல்யாணின் உஸ்தாத் பகத்சிங்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஜெயிலர் - 2: ஷாருக்கானுக்குப் பதிலாக பவன் கல்யாண்?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


