மேற்கு வங்கத்தில் உள்ள ஐஐடி-கரக்பூர் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இறந்தவர் அகமதாபாத்தைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் மாணவர் ஜெய்வீர் சிங்(21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், அவர் விடுதிக் கட்டடத்தின் 8ஆவது மாடியில் இருந்து குதித்ததாகக் கூறப்பட்ட நிலையில், சனிக்கிழமை காலை பலியானார். நேரு ஹால் விடுதியில் அவர் தங்கியிருந்தார்.
அடல் பிஹாரி வாஜ்பாய் ஹால் அருகே காலை நேரத்தில் வளாகப் பாதுகாப்புப் பணியாளர்கள் அவரது உடலை முதலில் கண்டதாகவும், பின்னர் அவர்கள் கல்வி நிறுவன அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாணவரை மீட்டு வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்,
அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இவ்வாறு குறிப்பிட்டனர். கூராய்வுக்காக உடல் மெதினிபூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள், ஏதேனும் தற்கொலைக் கடிதம் மீட்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்து வருவதாகவும், அவரது வகுப்புத் தோழர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் பேசி வருவதாகவும் தெரிவித்தனர். இதனிடையே விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக ஐஐடி-கரக்பூர் அதிகாரிகள் கூறினர்.
"இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது. மேலும் போலீஸாருடன் ஒருங்கிணைந்து தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன," என்று கல்வி நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த ஓராண்டாக வளாகத்தில் பதிவாகி வரும் தொடர்ச்சியான மாணவர் மரணங்களின் வரிசையில் இந்தச் சம்பவமும் இணைகிறது.
Summary
Yet another incident of an alleged suicide of a student at the Indian Institute of Technology (IIT), Kharagpur in West Bengal rocked the campus on Saturday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மேற்கு வங்கத்தில் கையெறி குண்டுகள் கண்டுபிடிப்பு: என்ஐஏ வழக்குப்பதிவு
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - பாஜகவினா் மோதல்: அறிக்கை சமா்ப்பிக்க தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்

ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!

சென்னை ஐஐடியில் எம்.டெக், எம்.எஸ்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


