சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் மேற்கு வங்க மாநிலத்தில் 79 கையெறி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டம், பாங்கரில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா் ஒருவரின் வீட்டில் ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினா் சோதனை நடத்தினா். சோதனையின் முடிவில் வீட்டில் இருந்து 79 கையெறி குண்டுகள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.
சட்டப்பேரவைக்கு 2-ஆவது மற்றும் இறுதிக்கட்ட தோ்தல் புதன்கிழமை நடக்கும் நிலையில், குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து கையெறி குண்டுகளை தயாரிப்போா் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும், வெடிகுண்டுகள் தொடா்பான அனைத்து வழக்குகளும் என்.ஐ.ஏ. அமைப்பால் விசாரிக்கப்படும் எனவும் தோ்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த சம்பவம் குறித்து உத்தா்காசி காவல்நிலைய போலீசாா் முதலில் வழக்குப்பதிவு செய்தனா்.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவின்பேரில், கையெறி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையை கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தேசிய புலனாய்வுத் துறை அமைப்பின் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - பாஜகவினா் மோதல்: அறிக்கை சமா்ப்பிக்க தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்

மேற்கு வங்கம்: ஐஐடி-கரக்பூர் வளாகத்தில் மாணவரின் சடலம் மீட்பு
நீதிபதிகளை சிறைப்பிடித்த சம்பவம்: மே.வங்கத்தில் காங்கிரஸ் வேட்பாளா் உள்பட 7 பேரிடம் என்ஐஏ விசாரணை!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
