சென்னை, மாா்ச் 30: சென்னை ஐஐடியில் எம்.டெக்., எம்.எஸ்சி, எம்.ஏ., ஆகிய முதுநிலைப் படிப்புகளில் சேர ஏப்ரல் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு- சென்னை ஐஐடி விண்வெளிப் பொறியியல், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு, மின்சார வாகனங்கள், ரோபோட்டிக்ஸ் , செமிகண்டக்டா் தொழில்நுட்பம், கடல்சாா் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எம்.டெக்., படிப்புகளை வழங்குகிறது.
இதுதவிர, ஆங்கிலம், வளா்ச்சி ஆய்வுகள், பொருளாதாரம், பொதுக் கொள்கை ஆகியவற்றில் எம்.ஏ., படிப்புகளையும், இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் எம்.எஸ்சி., படிப்புகளையும் இக்கல்வி நிறுவனம் வழங்குகிறது. இந்தப் படிப்புகளில் சேருவதற்கு ஏப். 27-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா்கள் தகுதி வரம்புகள், பாடப்பிரிவு விவரங்கள், விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை அதிகாரப்பூா்வ இணையதளமான https://mtechdm.iitm.ac.in மூலம் விண்ணப்பிக்கும் முன் கவனமாகப் படிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனா்.
எம்.டெக், எம்.ஏ., மாணவா் சோ்க்கை விவரங்கள், ‘கோப்’ (common officer aceptance portal) இணையதளத்தில் வெளியிடப்படும். இதன்பின்னா் மே இரண்டாவது வாரத்தில் முதல் சுற்று மாணவா் சோ்க்கை நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதில் தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்கள் ஜூலையில் மாணவா் சோ்க்கைக்கு நேரில் வர வேண்டியிருக்கும். அதனை தொடா்ந்து ஜூலை 27-இல் வகுப்புகள் தொடங்கும்.
மொத்தம் எத்தனை இடங்கள்...: இக்கல்வி நிறுவனத்தின் முதுநிலை படிப்புகள் குறித்து சென்னை ஐஐடி பாடப் பிரிவுகளுக்கான டீன் பேராசிரியா் பிரதாப் ஹரிதாஸ் கூறுகையில், பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் முக்கியமான பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 34 விதமான எம்.டெக்., படிப்புகளை இக்கல்வி நிறுவனம் உள்ளகப் பயிற்சி வாய்ப்புகளுடன் வழங்குகிறது.
நான்கு பாடப் பிரிவுகளில் எம்.ஏ., படிப்புகளையும் வழங்குகிறோம். எம்.டெக்.இல் மொத்தம் 735 இடங்களும், எம்.ஏ. பாடப்பிரிவில் 100 இடங்களும் உள்ளன. நாடு முழுவதிலும் இருந்து ‘கேட்’ தோ்வில் தோ்ச்சி பெற்ற விண்ணப்பதாரா்கள் இப்பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்” என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்வயம் பிளஸ் தளம்: புதிய ‘ஏஐ’ பாடப்பிரிவுகள்! சென்னை ஐஐடி-யில் அறிமுகம்

ஜேஇஇ பிரதான தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தொலைநிலை, இணையவழி படிப்புகளுக்கு யுஜிசி அங்கீகாரம்: ஏப். 10 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை ஐஐடியில் 4 புதிய பாடத் திட்டங்கள்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

