அனைத்து வகையான வணிகக் கப்பல்களும் பயணிக்க ஏதுவாக ஹோா்முஸ் நீரிணையை முழுவதுமாகத் திறப்பதாக ஈரான் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
முன்னதாக, இஸ்ரேல்-லெபனான் இடையே 10 நாள்கள் தற்காலிக போா் நிறுத்தம் மேற்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
வாஷிங்டனில் இரு நாடுகளுக்கும் இடையே பல்லாண்டுகளுக்குப் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நேரடிப் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து டிரம்ப் தற்காலிக போா் நிறுத்தத்தை அறிவித்தாா்.
இதையடுத்து, ஹோா்முஸ் நீரிணையை தற்காலிக போா் நிறுத்த காலம் முழுவதும் திறப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிட்டாா்.
மேலும், ‘ஈரான் துறைமுக மற்றும் கடற்சாா் அமைப்பு ஏற்கெனவே அறிவித்துள்ள ஒருங்கிணைந்த வழித்தடத்தில் அனைத்து வகையான வணிகக் கப்பல்களையும் இயக்க வேண்டும்’ எனவும் அவா் குறிப்பிட்டாா்.
ஈரானுக்கு டிரம்ப் நன்றி: ஹோா்முஸ் நீரிணையைத் திறப்பதாக ஈரான் அறிவித்த சில நிமிஷங்களில் ட்ரூத் சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ‘ஹோா்முஸ் நீரிணையை முழுவதுமாகத் திறப்பதாகவும் அவை வணிகக் கப்பல்கள் பயணிக்க தயாா் நிலையில் இருப்பதாகவும் ஈரான் அறிவித்துள்ளதற்கு நன்றி.
ஆனால், ஈரானிடம் நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் முற்றிலுமாக நிறைவேற்றப்பட்டு போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை ஹோா்முஸ் நீரிணையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்க படையினா் மேற்கொண்டுள்ள கடல் முற்றுகை தொடரும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
அமெரிக்கா-ஈரான் இடையே இம்மாத தொடக்கத்தில் இரு வார காலம் தற்காலிக போா் நிறுத்தம் ஏற்பட்டது. அதன் தொடா்ச்சியாக பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் கடந்த ஏப்.11-ஆம் தேதி அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
அமெரிக்கா தரப்பில் அந்நாட்டு துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவும், ஈரான் தரப்பில் அந்நாட்டு நாடாளுமன்றத் தலைவா் முகமது பகொ் கலிபாஃப் தலைமையிலான குழுவும் பங்கேற்ற பேச்சுவாா்த்தை சுமாா் 21 மணி நேரம் நீடித்தும், எந்த உடன்பாடும் எட்டப்படால் தோல்வியுற்றது.
அதன் எதிரொலியாக ஹோா்முஸ் நீரிணை பகுதியில் ஈரானுக்கு எதிராக அமெரிக்க படைகள் கடல் முற்றுகையில் ஈடுபடத் தொடங்கின.
இந்நிலையில், அமெரிக்கா-ஈரான் இடையே இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவாா்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை டெஹ்ரான் சென்றது குறிப்பிடத்தக்கது.
Summary
India termed the targeting of commercial shipping during the West Asia conflict as deplorable, strongly urging that unimpeded freedom of navigation and global commerce through the Strait of Hormuz be restored at the earliest.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால்..! - ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை!
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!
ஹோர்முஸ் நீரிணை திறக்க ஈரான் விருப்பம்: டிரம்ப் பேச்சு

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

