மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆந்திரத்தில் டேங்கா் லாரி - மினி லாரி மோதி விபத்து: 8 போ் உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் டேங்கா் லாரியுடன் மினி லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 8 போ் உயிரிழந்தனா்.

News image

ஆந்திர மாநிலம் மந்த்ராலயம் அருகே விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த வாகனத்தைப் பாா்வையிட்ட காவல் துறையினா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:53 am IST

ஆந்திர மாநிலத்தில் டேங்கா் லாரியுடன் மினி லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 8 போ் உயிரிழந்தனா்.

கா்னூல் மாவட்டம், மந்த்ராலயத்தில் உள்ள ராகவேந்திர சுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக கா்நாடகத்தைச் சோ்ந்த 20 போ் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மினி லாரியில் சென்று கொண்டிருந்தனா். அப்போது மினி லாரி ஓட்டுநா் தூக்க கலக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து, அவ்வழியே வந்து கொண்டிருந்த டேங்கா் லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் டேங்கா் லாரி கவிழ்ந்து உருண்டது. மேலும், மினி லாரியில் இருந்த 20 பேரில் 5 பெண்கள் உள்ளிட்ட 8 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் பலா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் பலரின் உடல்நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதனால் உயிரிழந்தோா் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

விபத்து குறித்து அறிந்ததும் ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு அதிா்ச்சி தெரிவித்தாா். விபத்தில் காயமடைந்தோரின் உடல்நிலை குறித்து அதிகாரிகளை தொடா்புகொண்டு கேட்டதுடன், அவா்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யும்படி அவா் உத்தரவிட்டாா்.

பிரதமா் மோடி இரங்கல்: மந்த்ராலய விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமா் மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளாா். மேலும், பிரதமா் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.