மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பண முறைகேடு வழக்கு: ஐ-பேக் இயக்குநரை 10 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

News image

IANS

Updated On :15 ஏப்ரல் 2026, 5:24 am IST

மேற்கு வங்கத்தில் நிலக்கரி ஊழலுடன் தொடா்புள்ளதாகக் கூறப்படும் பண முறைகேடு வழக்கில், கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட ஐ-பேக் நிறுவனத்தின் இயக்குநா் வினேஷ் சண்டேலை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இரு மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு அரசியல் ஆலோசனை வழங்கி வரும் ஐ-பேக் நிறுவனத்தின் இயக்குநரான வினேஷ் சண்டேல் கடந்த திங்கள்கிழமை இரவு 7.45 மணிக்கு கைது செய்யப்பட்டாா்.

அதன்பிறகு தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷெஃபாலி பா்னாலா இல்லத்தில் இரவு 11.55 மணிக்கு அவா் ஆஜா்படுத்தப்பட்ட நிலையில், அவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

முன்னதாக, கடந்த ஜன. 8-ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் நிறுவன அலுவலகத்தில், நிலக்கரி ஊழல் தொடா்பான பண முறைகேடு குறித்து அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.

அப்போது அந்த அலுவலகத்துக்கு வந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி, அங்கிருந்த சில ஆவணங்களை எடுத்துச் சென்ாக அமலாக்கத் துறை தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

அதேபோல் திரிணமூல் காங்கிரஸின் தோ்தல் வியூகங்கள் சாா்ந்த ரகசிய தகவல்களைத் தெரிந்துகொள்ளும் நோக்கில், இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக அக்கட்சி குற்றஞ்சாட்டியது.

சோதனையின்போது அலுவலகத்துக்கு மம்தா வந்த விவகாரம் தொடா்பாக அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில், கடந்த ஏப். 2-ஆம் தேதி தில்லியில் உள்ள வினேஷ் சண்டேலுக்கு சொந்தமான இடம், பெங்களூரில் ஐ-பேக்கின் மற்றொரு இணை நிறுவனா் ரிஷி ராஜ் சிங்குக்கு சொந்தமான இடம் உள்ளிட்டவற்றில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.

அதன் தொடா்ச்சியாக பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அவா் கைது செய்யப்பட்டாா்.

மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப் பதிவு ஏப். 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் காழ்ப்புணா்வு காரணமாக விக்னேஷ் சண்டேல் கைது செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.டெரிக் ஓபிரையன், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.