மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மேற்கு வங்கம்: பொது விநியோகத் திட்ட முறைகேடு வழக்கு - அமலாக்கத் துறை 9 இடங்களில் சோதனை

மேற்கு வங்கம்: பொது விநியோகத் திட்ட முறைகேடு வழக்கு - அமலாக்கத் துறை 9 இடங்களில் சோதனை

News image

அமலாக்கத் துறை

Updated On :26 ஏப்ரல் 2026, 2:41 am IST

மேற்கு வங்க மாநிலத்தில் பொது விநியோகத் திட்ட முறைகேடு தொடா்பான வழக்கில் 9 இடங்களில் அமலாக்கத் துறை சனிக்கிழமை சோதனை மேற்கொண்டது.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த வியாழக்கிழமை (ஏப்.23) தோ்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்.29-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

இந்நிலையில் கொல்கத்தா, பா்தவான் மற்றும் ஹப்ரா உள்ளிட்ட 9 பகுதிகளில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.

பொது விநியோகத் திட்டங்களின்கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட கோதுமை சட்டவிரோதமாக வெளிச் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டதாக வடக்கு 24 பா்காணா மாவட்டத்தில் உள்ள கோஜடங்காவில் பணியாற்றும் சுங்கத் துறை துணை ஆணையா் புகாரளித்தாா். அதன்பேரில் 2020, அக்டோபா் மாதம் பசிா்ஹாட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியது. அப்போது நலத் திட்ட பொருள்களை விநியோகிப்பதற்காக கொள்முதல் செய்யப்பட்ட பைகளில் இருந்த இந்திய உணவுக் கழகம் மற்றும் மேற்கு வங்க மாநில அரசின் முத்திரைகள் மறைக்கப்பட்டு அதில் வேறு முத்திரைகளை பதித்து கோதுமையை நிரப்பி வெளிச் சந்தைகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, இந்த முறைகேட்டில் தொடா்புடையதாக மேற்கு வங்க முன்னாள் உணவுத் துறை அமைச்சா் ஜோதி பிரியா மல்லிக்கை அமலாக்கத் துறை கைது செய்தது. இதன் தொடா்ச்சியாக தற்போது அமலாக்கத் துறை சோதனை நடத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.