அஸ்ஸாமின் தற்போதைய முதல்வர் நாட்டிலேயே மிகவும் ஊழல் மிகுந்தவர் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், அஸ்ஸாமின் தற்போதைய முதல்வர் நாட்டிலேயே மிகவும் ஊழல் மிகுந்தவர். சட்டத்தின் பிடியில் இருந்து அவர் தப்ப முடியாது. தனது அரசியல் எதிரிகளையும் விமர்சகர்களையும் துன்புறுத்துவதற்காக அவர் மாநில அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
எழுப்பப்படும் கேள்விகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மை, அதிகாரத்திற்கான பொறுப்புடைமை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவையே நமது அரசியலமைப்பு விழுமியங்களின் அடிப்படையாகும். காங்கிரஸ் கட்சி பவன் கேராவிற்கு உறுதுணையாக நிற்கிறது. எதற்கும் அஞ்சி பின்வாங்க மாட்டோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர்களான பவன் கேரா, கௌரவ் கோகோய் ஆகியோர், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயன் சர்மா, இந்தியா தவிர ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பதாக குற்றச்ஞ்சாட்டியிருந்தனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை முதல்வர் ஹிமந்த பிஸ்வா மறுத்தார். இதுதொடர்பாக, ரினிகி புயன் சர்மா போலீஸில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து, அஸ்ஸாம் போலீஸ் கேராவின் இல்லத்தில் சோதனைகளை நடத்தியது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் பவன் கேராவிற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி உறுதியாக இருப்பதாக எம்.பி. ராகுல் காந்தி திங்கள்கிழமை தெரிவித்தார்.
Summary
Congress MP Rahul Gandhi on Monday extended support to party spokesperson Pawan Khera, following the Assam Police action linked to allegations made by Khera against Assam Chief Minister Himanta Biswa Sarma’s wife, Riniki Bhuyan Sharma.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அஸ்ஸாமின் புதிய பாஜக முதல்வர் யார்? மே 10-ல் தேர்வு!

முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ராஜிநாமா!

பிரதமர் மோடி, ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்!

இந்தியாவின் ஊழல் மிகுந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா: ராகுல்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

