/

பிகார் சட்டப்பேரவைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

பிகார் சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

பிகார் சட்டப்பேரவை. - IANS

Updated On :10 ஏப்ரல் 2026, 4:25 pm IST

பிகார் சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல் வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி அனு குமாரி கூறுகையில், "பிகார் சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல் அடங்கிய மின்னஞ்சல் ஒன்று வந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

போலீஸார் அந்த வளாகத்தை முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர்.

வெடிகுண்டு மற்றும் மோப்ப நாய் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். இதனால் சட்டப்பேரவை வளாகத்தில் சற்று பரபரப்பு காணப்பட்டது.

முன்னதாக கடந்த மார்ச் 13ஆம் தேதியும் சட்டப்பேரவைக்கு இதேபோன்றதொரு மிரட்டல் வந்தது. ஆனால் சோதனைக்குப் பிறகு அது வெறும் புரளி என தெரியவந்தது.

Summary

The Bihar Legislative Assembly on Friday received a bomb threat through email, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.