மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

செல்ஃபி மோகம் - ஆந்திரத்தில் அருவியில் மூழ்கி 3 மாணவிகள் பலி

ஆந்திரத்தில் அருவிக்கு சுற்றுலா சென்ற மாணவிகள் செல்ஃபி மோகத்தில் நீரில் மூழ்கி பலியாகினர்.

News image

Photo grab X video.

Updated On :10 ஏப்ரல் 2026, 4:04 pm IST

ஆந்திரத்தில் அருவிக்கு சுற்றுலா சென்ற மாணவிகள் செல்ஃபி மோகத்தில் நீரில் மூழ்கி பலியாகினர்.

ஆந்திர மாநிலத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த நான்கு சிறுமிகள் அனந்தகிரி நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அப்போது செல்ஃபி எடுக்க முயன்றபோது 3 பேர் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் வழுக்கி விழுந்தனர்.

ஆனால் அவர்களுக்கு நீச்சல் தெரியாத காரணத்தால் 3 பேரும் நீரில் மூழ்கி பலியாகினர். நான்காவது சிறுமி உயிர் தப்பி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் அல்லுரி சீதாராம ராஜுவில் உள்ள மூலகும்மி கிராமத்தில் நிகழ்ந்தது. "நீச்சல் தெரியாமல் செல்ஃபி எடுப்பதற்காக நீர்வீழ்ச்சிக்குள் இறங்கியபோது மூன்று சிறுமிகள் நீரில் மூழ்கினர்," என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால், அனைத்து சிறுமிகளும் வெளியே சென்றிருந்தனர்.

நீர்வீழ்ச்சி அளவில் சிறியதாக இருந்தாலும், நீச்சல் தெரியாதவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். இச்சம்பவம் குறித்து சட்டத்தின் தொடர்புடைய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

Summary

Three minor girls drowned on Thursday after venturing into a waterfall to take a selfie here, a police official said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.