நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்தியத் திரையுலகில் மிகவும் விருப்பத்துக்குரிய நடிகையான த்ரிஷா, நடிகர் சூர்யாவின் மௌனம் பேசியதே படத்தின் மூலம் கடந்த 2002 ஆம் ஆண்டு அறிமுகமானார்.
கடந்த 24 ஆண்டுகளில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக தமிழ்த் திரையுலகில் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழின் முன்னணி நாயகர்கள் அனைவருடனும் நடித்த வெகுசில நடிகைகளில் த்ரிஷாவும் ஒருவர்.
சமீப ஆண்டுகளில் விஜய்யின் லியோ (2023) , தக் லைப் (2025), விடாமுயற்சி (2025), குட் பேட் அக்லி (2025) படங்களில் நடித்திருந்தார்.
விரைவில் வெளியாகவுள்ள சூர்யாவின் கருப்பு திரைப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடித்துள்ளார். சமீபத்தில், நடிகர் விஜய் உடன் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக இவர்மீது விமர்சனங்கள் எழுந்து சர்ச்சையானது.
இந்த நிலையில், தேனாம்பேட்டையில் உள்ள த்ரிஷா வீட்டிற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.
வெடிகுண்டு சோதனை செய்யும் நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் அங்கு சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரிய வந்துள்ளது.
Summary
Bomb threat to actress Trisha's home!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

த்ரிஷாவுக்கு என்னதான் ஆச்சு? நலமாக 36 ஆண்டுகள் ஆகுமாம்...
ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

பிகார் சட்டப்பேரவைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

