மேற்கு வங்கத்தின் கலாசாரத்துக்கு முரணான இடங்களின் பெயர்கள் மாற்றப்படும் என பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் வரும் ஏப். 23 மற்றும் ஏப். 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையடுத்து, ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜகவின் மூத்த தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன், பாஜக ஆட்சியில் மேற்கு வங்கத்தில் பல முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
“பாஜக ஆட்சி அமைந்தவுடன் மேற்கு வங்கத்தின் கலாசாரத்துக்கு முரணான அலிப்பூர்துவார் முதல் இஸ்லாம்பூர் வரையிலான பல்வேறு இடங்களின் பெயர்கள் மாற்றப்படும். மே 4 ஆம் தேதிக்குப் பிறகு, இந்த இடங்களின் பெயர்களில் ஏற்படும் மாற்றங்களுடன் கூடவே, உங்கள் (மக்கள்) வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படும்” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், மேற்கு வங்க பெண்களின் பாதுகாப்புக்கு வங்கதேசம் மிகவும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், ஊடுருவல்காரர்களை சட்டரீதியாக எதிர்கொண்டு நாட்டை விட்டு வெளியேற்றுவோம் எனவும் நிதின் நவீன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
BJP National President Nitin Nabin has stated that the names of places contrary to the culture of West Bengal will be changed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஜகவின் சித்தாந்தத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது: நிதின் கட்கரி

மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்
மேற்கு வங்கத்தில் வரலாறு படைக்கும் பாஜக! முதல்முறையாக ஆட்சியமைக்கிறது!

திரிணமூல் காங்கிரஸை மேற்கு வங்க மக்கள் நிராகரித்துவிட்டனர்: பாஜக
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


